ஆவணி மாதம் இப்போது நடக்கும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நல்ல பாம்பு குட்டிகள் வெளிவர தொடங்கியுள்ளது.
எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும்படியும், செருப்பு, ஷூஸ் வைக்கும் ஸ்டாண்ட் பகுதியை நன்கு கவனிக்க வேண்டுமென கடலூர் பாம்பு பிடிக்கும் ஆர்வலர் செல்லா தெரிவித்துள்ளார்.
இன்று மஞ்சகுப்பம் காந்திநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நல்ல பாம்பு குட்டிகளை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட்ட செல்லா கூறியதாவது, ‘ஆணி, ஆடி, மாதங்களில் நல்ல பாம்பு தனது இனப்பெருக்கத்தை ஆரம்பிக்கும். அதன் பின்பு ஆவணி மாதத்தில் குட்டிகள் வெளிவர துவங்கும். தற்போது கடலூர் மாவட்டத்தில் நல்ல பாம்பு குட்டிகள் வெளிவர துவங்கியுள்ளன.
இவ்வாறு வெளி வருகின்ற நல்ல பாம்பு குட்டிகள் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் குளிர்ந்து இருக்கக்கூடிய இடங்களில் தஞ்சம் அடையும். படிக்கட்டு சந்து, செருப்பு வைக்கும் ஸ்டாண்ட் பகுதி, ஷூஸ் உள்பகுதியில் மறைந்திருக்கும்.
எனவே பெற்றோர்கள் இதை கவனித்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், கடலூர் மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“