பொள்ளாச்சியில் தேசிய தென்னை நார் கூட்டமைப்பு சார்பில் நிக்க வச்சு கேளுங்க என்ற நிகழ்ச்சி பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க வேட்பாளர் வசந்த ராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வசந்த ராஜன் போட்டியீடுகிறார், மடத்துக்குளம் பகுதியில் கரும்பு விவசாயிகளுடன் உரையாடல்,கிணத்துக் கிடவில் மகளிருடன் மத்திய அரசு நலத்திட்டங்கள் குறித்து வாக்கு சேகரிப்பு என பா.ஜ.க வேட்பாளர் தன்னை ஆதரிக்குமாறு வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள நாட்டுக்கல்பாளையம் பகுதியில் தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் நிக்க வச்சு கேளுங்க என தென்னை நார் கூட்டமைப்பு சார்பில் விவசாயகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பாஜக வேட்பாளர் விவசாயிகளிடம் தேவைகளை கேட்டறிந்தார் அப்பொழுது பேசிய விவசாயி தனது தென்னைநார் கம்பெனியில் வட மாநில தொழிலாளர்கள் ஆதார் கார்டு வாங்கிக்கொண்டு வேலைக்கு அமர்ந்தி இருக்கிறோம் அவர்கள் குற்றப் பின்னணி எதுவும் தெரிவதில்லை ஆதலால் அழைத்து வரும் நபர்களிடம் உரிய முறையில் இவர்களது பின்னணி தெரிய வேண்டும் தமிழகத்தில் இவர்கள் தங்கி விட்டால் ரேஷன் கார்டு வாங்கும் நிலமை உருவாகும் ஆதலால் இவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது என கூறி வேட்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வேட்பாளர் இதற்கு நடவடிக்கை எடுப்பேன் என கூறி விவசாயி சமாதானப்படுத்தினார்.
இது செய்தியாளரிடம் கூறும் பொழுது பொள்ளாச்சி தென்னை விவசாயத்தை நம்பி இருந்தது விவசாயிகள் காயர் தொழிற்சாலைகளில் மத்திய மாநில அரசுகளை நம்பி முதலீடு செய்தனர் திடீரென வெள்ளை நிறத்தில் இருந்து ஆரஞ்சு க்கு மாற்றப்பட்டது தற்போது வெள்ளை நிறத்துக்கு மாற்றப்பட்டது
இதனால், தொழில்கள் முடக்கம் ஆனாது, வேலை வாய்ப்பு இல்லாமல் அதிகம் பேர் வெளி மாநிலங்களுக்கு சென்று விட்டனர்,விவசாயிகள் நான் கருதி தென்னைநர் ஆராய்ச்சி மையம் கொண்டுவரப்படும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாளர் பயிற்சி முக்கியத்துவம் அளிக்கப்படும் காயர் பித்தனால் உருவாக்கப்படும் பொருட்களாக அனைத்தும் உள்நாட்டில் நடிகர்கள் மூலம் விளம்பரம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் இதனால் 10 மடங்கு வியாபாரம் பெருகும் திருப்பூர் இன்று டாலர் சிட்டி அதுபோல் பொள்ளாச்சியை காயர் சிட்டியாக உருவாக்குவோம் என தெரிவித்தார், கூட்டத்தில் விவசாயி பாஜக வேட்பாளர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது விவசாயிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“