scorecardresearch

குமரியில் 10,000 படகுகளில் அள்ளி வரப்பட்ட சாளை மீன்கள்: விலை கடும் வீழ்ச்சி

ஒவ்வொரு பருவ நிலைக்கு ஏற்ப பல்வேறு தரப்பட்ட மீன்கள் கிடைக்கும். தற்போது சாளை வகை மீன்கள் கிடைக்கும் காலம்.

Cod fish prices fall in Kanyakumari less than 1kg rs 10

கன்னியாகுமரி குளச்சல், சேரியாமுட்டம், சின்னமும்ட்டம், தேங்காய் பட்டணம் ஆகிய நான்கு மீன் பிடி துறைமுகங்களை கொண்ட மாவட்டம் ஆகும்.
இங்குள்ள, சேரியாமுட்டம் மீன்பிடி துறைமுகம் தனியாருக்கு சொந்தமானது. மாவட்டத்தில் 2000 க்கும் அதிகமான அதிநவீன இயந்திர படகுகளும், 15,000க்கு அதிகமான பைபர் படகுகளும் உள்ளன.

மேலும், 20 முதல் 30 நாள்கள் கடலிலே தங்கி மீன் பிடிக்கும் தனித்த திறமையான மீனவர்களும் குமரி மாவட்டத்தில் மட்டுமே உண்டு. அந்த வகையில், ஒவ்வொரு பருவ நிலைக்கு ஏற்ப பல்வேறு தரப்பட்ட மீன்கள் கிடைக்கும். தற்போது சாளை வகை மீன்கள் கிடைக்கும் காலம்.

குளச்சல் துறைமுகத்தில் இன்று கரை சேர்ந்த அனைத்து படகுகளிலும் சாளை மீன்களை சுமந்து வந்தன. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நிலவி வந்த வழி மண்டல சுழற்சி காரணமாக அரபிக்கடல் பகுதிகளில் சூரை காற்றுடன் கனமழை பெய்து வந்தது.

இந்த நிலையில் மழை ஓய்ந்து நேற்று மீனவர்கள் 10,000க்கும் அதிகமான பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று கடலில் வீசிய வலைகள் அனைத்திலும் வலை கொள்ளாத அளவிற்கு சாளை மீன்கள் சிக்கியது.
துறைமுகங்களுக்கு திரும்பிய அனைத்து படகுகளிலும் சாளை மீன்கள் கிடைத்ததால் சந்தையில் மீனின் விலை மிக,மிக குறைந்துள்ளது. சாதாரணமாக 1 கிலோ ரூ.50.க்கு விற்ற சாளை மீனின் விலை கிலோ ரூ.10. ஆக குறைந்தது. 35 கிலோ எடை கொண்ட கொண்ட ஒரு பாக்ஸ் ரூ.300.00க்கு மட்டுமே விற்பனை ஆனது.

இதற்கிடையில், குமரி மாவட்டத்தின் வியாபாரிகளை விட கேரளா வியாபாரிகளின் வருகையும் பெரும் எண்ணிக்கையில் வந்ததுமே சாளை மீனின் விலை மிக குறைய மற்றொரு காரணம் எனவும் படகு பைபர் மீன்பிடி தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Cod fish prices fall in kanyakumari less than 1kg rs 10