Cognizant : சென்னையில் காக்னிசண்ட் அலுவலகம் கட்டுவதற்கு 20 லட்சம் டாலரை (சுமார் ரூ.12 கோடி) லஞ்சம் கொஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டது அமெரிக்கா அரசு.
அமெரிக்க சாஃப்ட்வேர் நிறுவனமான காக்னிசெண்ட் விதிமுறைகளை மீறி, தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதை கண்டறிந்த அமெரிக்கா கடந்த ஐந்து வருடங்களாக இந்த வழக்கினை விசாராணை செய்து வருகிறது.
2.5 கோடி டாலர்கள் அபராதம் செலுத்த முடிவு
அப்போது காக்னிசண்ட் நிறுவனத் தலைவராக கோர்டன் கோபுர்ன் மற்றும் தலைமை சட்ட அதிகாரி ஸ்டீவன் ஷெவார்ட்ஸ் ஆகியோர் தங்களின் ஒப்பந்ததாரர்கள் மூலம் இந்த லஞ்சப் பணம் கைமாற்றி இருப்பதாகவும், 16 லட்சம் டாலரை இரண்டு தவணைகளில் இவர்கள் அளித்ததாகவும் விசாரணை மூலம் தகவல் வெளியானது.
அமெரிக்க நீதித்துறை மற்றும் பங்குச் சந்தை விதிமீறல் நடவடிக்கைக்காக இந்நிறுவனம் 2.5 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த தொகையை செலுத்துவதாக ஒப்புக் கொண்ட அந்த நிறுவனத்தின் தலைவர் பிரான்சிஸ்கோ டி சௌசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த அபராதத் தொகை நிறுவனத்தின் உள்நிதி ஆதாரம் மூலம் செலுத்த இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.