/indian-express-tamil/media/media_files/2025/09/14/ship-2025-09-14-14-54-45.jpg)
- Sep 14, 2025 18:35 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 5 புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்கள் பயன்பெறும் 5 நலத்திட்டங்களை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- Sep 14, 2025 16:45 IST
"விஜய் சுற்றுப்பயணம் - சட்டம் தன் கடமையை செய்யும்" - அமைச்சர் ரகுபதி
"விஜய் சுற்றுப்பயணத்தில் பொது சொத்துக்கள் சேதம், சட்டம் தன் கடமையை செய்யும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வசதிக்காக வார விடுமுறையில் மட்டும் விஜய் பிரசாரம் செய்கிறார். 2011ல் திமுகவை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்யும்போது, விஜய்க்கு வந்ததை விட அதிக கூட்டம் வந்தது" என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
- Sep 14, 2025 16:16 IST
கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து!
கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. மலேசியாவில் இருந்து பழனி வந்து தரிசனம் செய்த பயணிகள் கொடைக்கானல் சென்றபோது வாகனம் விபத்தில் சிக்கியது. 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனத்தில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
- Sep 14, 2025 14:54 IST
விபத்தில் இறந்த கடலூர் கப்பல் அதிகாரி குடும்பத்தினருக்கு ரூ 1.91 கோடி நஷ்டஈடு: நீதிமன்றம் உத்தரவு
கடலூர் முதுநகரை சேர்ந்த கப்பல் அதிகாரி விமல் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 27 -ம் தேதி லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த விமலின் தந்தை சிவலிங்கம், தாய் விஜயா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தொடங்கினர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரு கோடி 91 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வட்டி தொகையுடன் நஷ்ட ஈடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.
- Sep 14, 2025 13:46 IST
தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையா? பொய் சொன்னாலும், பொருத்தமாக சொல்லுங்கள் - ஸ்டாலின்
கிருஷ்ணகிரியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லுகின்றனர்; பொய் சொன்னாலும், பொருத்தமாக சொல்லுங்கள் ” என்று என்று கூறினார்.
- Sep 14, 2025 13:17 IST
கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், 2 லட்சத்து 32 ஆயிரத்து 13 பயனாளிகளுக்கு ரூ.2,053 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்வில், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- Sep 14, 2025 12:20 IST
நடிகர் அஜித்தை இறக்கினால் இதைவிட இன்னும் கூட்டம் வரும் - சீமான்
திரையில் பார்த்த நடிகர் தெருவில் வரும்போது கூட்டம் வரதான் செய்யும். நடிகர் அஜித்தை இறக்கினால் இதைவிட இன்னும் கூட்டம் வரும் என த.வெ.க தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு கோவையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்
- Sep 14, 2025 10:50 IST
மிளகாய்பொடி தூவி 10 கிலோ தங்கம் கொள்ளை
திருச்சி, சிறுகனூர் அருகே தங்க வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரி திண்டுக்கல்லில் நகைகளை விற்பனை செய்துவிட்டு திரும்பிய போது வழிமறித்து கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 10 கிலோ தங்கத்துடன், 3 பேருடன் சென்னை நோக்கி காரில் வந்தவரை திருச்சி சமயபுரம் அருகே வந்தபோது காரை வழிமறித்து மிளகாய் பொடி தூவி கும்பல் ஒன்று கொள்ளையடித்துள்ளது. 10 கிலோ தங்கத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது
- Sep 14, 2025 10:20 IST
எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை வருகை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமாரின் தாயாரும், போஸ் தேவரின் மனைவியுமான மீனாள் அம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூர் ெஜயலலிதா ேகாவிலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உருவப்படம் இன்று மாலை 5 மணிக்கு ஜெயலலிதா கோவிலில் திறக்கப்படுகிறது. இதையொட்டி மதுரைக்கு வரும் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி. உதயகுமாரின் தாயாரின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
- Sep 14, 2025 09:45 IST
பெரம்பலூர் பிரசாரத்தை ரத்து செய்த விஜய் - அறிவிப்பு
பெரம்பலூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை காண மதியம் முதல் நள்ளிரவு வரை தொண்டர் காத்திருந்தனர். இரவு 1 மணியை கடந்து விட்டதால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெரம்பலூர் மக்கள் சந்திப்பை விஜய் ரத்து செய்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பெரம்பலூர் மக்கள் சந்திப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என த.வெ.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Sep 14, 2025 09:36 IST
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 15,724 கனஅடி நீர்வரத்து
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 15,724 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 119.72 அடியாகவும், நீர் இருப்பு 93.026 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து மொத்தமாக விநாடிக்கு 17,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- Sep 14, 2025 09:36 IST
தமிழ்நாட்டில் செப்.16 முதல் 20 வரை கனமழைக்கு வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வரும் செப்டம்பர் 16, 17, 18, 19, மற்றும் 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Sep 14, 2025 09:36 IST
"விஜயின் குற்றச்சாட்டை திருச்சி மக்கள் நிராகரிப்பார்கள்"
தி.மு.க ஆட்சியில் திருச்சி மாவட்டத்திற்கு எதுவும் செய்யவில்லை என்ற த.வெ.க. தலைவர் விஜயின் குற்றச்சாட்டை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். திருச்சியின் வளர்ச்சிப் பணிகளை அவர் சரியாகப் பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.