Advertisment

ஏழை மாணவர்களுக்கு தேடிச் சென்று தேவையான பொருட்களை வழங்கிய ஆசிரியர்கள்!

ஊரடங்கு முடியும் தருணம் வரை குழந்தைகளின் குடும்பங்களுக்கு உதவ முன் வந்துள்ளது அப்பள்ளியின் ஆசிரியர் அமைப்பு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbator NGR School teachers help poor students

Coimbator NGR School teachers help poor students

Coimbator NGR School teachers help poor students : கோவையில் கொரோனா வைரஸால் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 133-ஐ தொட்டது. தமிழகம் முழுவதும் 1520 பேர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். பொது போக்குவரத்து, நடமாட்டம், வேலை என அனைத்தும் முடக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முற்றிலும் நொறுங்கிப் போய் உள்ளது.

Advertisment

மேலும் படிக்க : மீளும் புதுவை : நடமாடும் உணவகங்கள் மூலம் ஏழைகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு

மதிய உணவுக்காக மட்டுமே பள்ளி போகும் குழந்தைகளும் இங்கு இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களின் தேவையை உணர்ந்து பள்ளிகள் மூலமாக அவர்களுக்கு உணவுகள் வழங்க அரசு ஏற்பாடு செய்திருக்கலாம் என்று பரவலாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

இந்நிலையில் கோவையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றின் ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு தேடிச் சென்று உதவி செய்துள்ளனர். வரதராஜபுரத்தில் அமைந்திருக்கும் என்.ஜி.ஆர். மேல்நிலைப்பள்ளியில் கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள், கட்டிட வேலைக்கு செல்லும் நபர்களின் குழந்தைகள் என சுமார் 2300 பேர் படித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க : ஐ.இ. தமிழ் முகநூல் நேரலை : மாலை 05:00 மணிக்கு நம்முடன் பேச வருகிறார் மனநல மருத்துவர் பன்னீர் செல்வன்

மாணவர்களின் தேவையை நன்றாக உணர்ந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனின் குடும்பத்திற்கும் ரூ. 1500 மதிப்புள்ள உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.  முதற்கட்ட பணியாக 400 குடும்பங்களுக்கு இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடியும் தருணம் வரை இக்குழந்தைகளின் குடும்பங்களுக்கு உதவ முன் வந்துள்ளது அப்பள்ளியின் ஆசிரியர் அமைப்பு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment