Coimbatore | Lok Sabha Election 2024: மேட்டுப்பாளையம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 108 வயது பத்மஸ்ரீ பாப்பம்மா பாட்டி தள்ளாத வயதிலும் தனது வாக்கைப் பதிவு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காலை 7 மணி முதல் கிராமப்புறங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏராளமானவர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள். இந்த நிலையில், தேக்கம்பட்டி கிராமத்தில் 108 வயது இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மா பாட்டி தன்னுடைய ஜனநாயக கடமையாற்றுவிதமாக தன் வாக்கை பதிவு செய்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“