/tamil-ie/media/media_files/uploads/2023/05/tamil-indian-express-2023-05-18T160444.038.jpg)
Coimbatore city police have formed 6 special teams to trace a 12-year-old girl who left her home on Wednesday afternoon Tamil News
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுதாகரன். இவரது மகள் 12 வயது சிறுமி ஸ்ரீநிதி இவர் வீட்டு அருகே விளையாடு கொண்டு இருந்தார். அப்போது திடீரென மாயமானார். இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் 6 தனி படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், சிறுமி விளையாடிய இடத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது, அவர் ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்து ஏறிய காட்சிகள் பதிவாகி இருந்தது என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து அந்த பேருந்து சென்ற பாதையில் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் ஆய்வு செய்த போது அவர் எங்கு இறங்கினார் என்பது தெரியவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/tamil-indian-express-2023-05-18T164452.177.jpg)
மேலும், சிறுமியின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் காவல்துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.