Advertisment

கோவை: ஒரு கையில் சிலம்பம் சுற்றிய சிறுமி… 2 கிலோ மீட்டர் தூரம் கடந்து புதிய உலக சாதனை!

கோவை: ஒரு கைகயில் சிலம்பம் சுற்றிய சிறுமி 2 கிலோ மீட்டர் தூரத்தை, 2 மணி நேரம் 8 நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore: 12 yr girl wrapped Silambam one arm, a new world record Tamil News

Coimbatore - 12 yeah school girl wrapping Silambam in one arm, a new world record Tamil News

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

Advertisment

Coimbatore News in Tamil: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை பெருமை படுத்தும் விதமாக கால்களை விரித்தபடி தத்தி, தத்தி 50 மீட்டர் தொலைவை ஓரு கைகளில் சிலம்பம் சுற்றியபடி 2 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் இரண்டு மணி நேரம் 8 நிமிடங்களில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார் சிலம்பம் மாணவி மெளனிகா.

கோவை சின்ன வேடம் பட்டி பகுதியில் உள்ள முல்லை மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி யில் பயின்று வருகின்ற மாணவியின் சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் அங்கீகரித்தனர்.

கோவை சின்ன வேடம் பட்டி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளக பள்ளி மாணவ மாணவிகளுக்கு, சிலம்ப கலையை கற்று தருவது மட்டுமில்லாமல், மாணவ மாணவிகள் கற்று கொண்ட கலையை அனைவரும் பாராட்டும் வகையில் பல்வேறு முயற்சிகளின் அடிப்படைகளில், சாதனைகளாக மாற்றி அனைவரும் வியந்து போற்றும் வகையில் சாதனை பக்கங்களில் இடம் பிடிக்க செய்து வருகின்றனர்.

publive-image

இன்று சின்னவேடம்பட்டி விநாயகர் கோவில் வளாகத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மற்றும் சத்யபிரியா தம்பதியினரின், 11வயது மகளான மெளனிகா கடந்த நான்கு ஆண்டுகளாக சிலம்பகலைகளை கற்று வருகின்றார்.

publive-image

இந்த நிலையில் நேற்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை பெருமை படுத்தும் விதமாக கால்களை விரித்தபடி தத்தி, தத்தி 50 மீட்டர் தொலைவை ஒரு கைகயில் சிலம்பம் சுற்றியபடி 2 கிலோ மீட்டர் தூரத்தை சுமார், இரண்டு மணி நேரம் 8 நிமிடங்களில் செய்து இந்திய நாட்டில் யாரும் இதுவரை செய்யாத புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்துடன், அதற்கான சான்றிதல் களையும் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

publive-image

இந்த நிகழ்ச்சியில், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சதாம் ஹுசைன், மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ் ராஜ் அதற்கான சான்றிதல்களையும் பதக்கங்களையும் வழங்கி மாணவியை பெருமை படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Tamilnadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment