பேருந்து விபத்தில் 19 பேர் படுகாயம், 2 பேர் பலி: தத்ரூபமாக ஒத்திகை காட்டிய கோவை மருத்துவ குழு

கோவையில் பேருந்து மற்றும் சக்கர வாகனம் மோதிய ஒத்திகை நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி எவ்வாறு அளிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கோவையில் பேருந்து மற்றும் சக்கர வாகனம் மோதிய ஒத்திகை நிகழ்ச்சியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி எவ்வாறு அளிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

author-image
WebDesk
New Update
Coimbatore: 19 injured, 2 killed in bus accident: medical team rehearsed realistically Tamil News

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பேருந்து விபத்து நிகழ்வு நிகழ்த்தி காட்டப்பட்டது. இதில் 21 பயணிகளும் ஒரு ஓட்டுநரும் கலந்து கொண்டனர்.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

கோவை பாலசுந்தரம் சாலையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் விபத்தில் மீட்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விபத்து காலங்களில் எவ்வாறு விபத்தில் சிக்கியவர்களை மீட்பது - முதலுதவி எவ்வாறு அளிப்பது - போன்ற ஒத்திகைகள் நிகழ்த்தி காட்டப்பட்டன.

Advertisment
publive-image
publive-image

விபத்து காலங்களில் செயல்படுவது என்று செயல்முறைகளுடன் விளக்கப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பேருந்து விபத்து நிகழ்வு நிகழ்த்தி காட்டப்பட்டது. இதில் 21 பயணிகளும் ஒரு ஓட்டுநரும் கலந்து கொண்டனர். பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி பின்னர் மின்கம்பத்தில் மோதி நிற்பது போன்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் பேருந்தின் சக்கரத்திற்கு அடியில் சிக்கி கொண்டது போன்றும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

Advertisment
Advertisements
publive-image

இந்த ஒத்திகையில், விபத்து நடைபெற்ற இடத்தில் தள மீட்பு குழு விரைந்து நோயாளிகளுக்கு முதல் உதவி செய்தனர். மேற்கொண்டு உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கபட்டது. மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி செல்வது போன்ற நிகழ்வுகள் ஒத்திகையாக செய்து காண்பிக்கப்பட்டது.

publive-image

இந்த முழு மாதிரி பயிற்சியும் பதிவு செய்யப்பட்டது. இதில் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் கலந்து கொண்டார். மேலும் பொதுமக்களுக்கு குழப்பங்கள் ஏற்படாத வகையில், நிகழ்ச்சிக்கான சுவரொட்டிகள் வெளியிடப்பட்டிருந்தன. இந்த ஒத்திகை நிகழ்ச்சி மிகவும் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Coimbatore Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: