/indian-express-tamil/media/media_files/2024/12/16/fIdsa7QTBak6jprqDpFx.jpg)
1998 கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி பாஷா உயிரிழந்தார்.
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் கை செய்யப்பட்ட குற்றவாளி பாஷா (75) உட்பட பலர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்படிருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக பிணையில் வெளிவந்த பாஷா கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று மாலை பாஷாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக தெரிகிறது. தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் உக்கடம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனபின்னர், சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.