பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Coimbatore: கோவை செட்டிவீதியை சேர்ந்தவர் வரலட்சுமி. இவரது சிறப்பு குழந்தை கோவை காந்திபார்க, சலிவன் வீதியில் உள்ள மாரண்ண கவுண்டர் உயர்நிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்தார். கடந்த 10 ஆம் வகுப்பு அரசு பொதுதேர்வில் ஆசிரியர்களின் உதவியுடன் தேர்வெழுதிய அந்த மாணவன் 300 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
அதை தொடர்ந்து, மேல்நிலை கல்வியான பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க கோவையில் உள்ள அரசு பள்ளிகள் மறுப்பதாக சிறுவனின் தாய் வரலட்சுமி வேதனையுடன் தெரிவிக்கின்றார். சில அரசு பள்ளிகளில் உங்கள் மகனை தனியார் பள்ளியில் படிக்க வையுங்கள் என்று மனசாட்சி இல்லாமல் பேசுவதாகவும், தனியார் பள்ளிகளில் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை செலவாகும் என்கிறார்கள் எங்களுக்கு அந்த அளவிற்க்கு வசதி வாய்ப்புகள் இல்லை என்று கண்ணீர் மழ்க கூறுகிறார்.
மேலும், கோவையில் உள்ள எந்த பள்ளியிலும் தனது மகனை சேர்காததால் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்ததாகவும், அனைத்து திறமைகளும் கொண்ட தனது மகனுக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்க மாவட்ட ஆட்சியர் உதவிபுரிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசை பொருத்தவரை இல்லம் தேடி கல்வி, மற்றும் பல்வேறு பெயர்களில் விளம்பரங்களை செய்துவரும் நிலையில் தனது சிறப்பு குழந்தையின் கல்வி அறிவிற்க்காக போராடி வரும் ஒரு தாயின் அழுகுரல் கேட்குமா? என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“