/tamil-ie/media/media_files/uploads/2019/03/child-abuse.jpg)
Coimbatore 6 year old baby rape and murder case
Coimbatore 6 year old baby rape and murder case : கோவை பன்னிமடைப் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளார். திங்கள் இரவு காணாமல் போன் அப்பெண் குழந்தை நேற்றுக் காலை உடலெங்கும் இரத்த காயங்களுடன் வீட்டிற்கு அருகே பிரேதமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவரை பிரேதமாக கண்டெடுத்த போதே அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கண்டறியப்பட்டது. பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் மருத்துவ முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில் அக்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
10 தனிப்படைகள் அமைத்து விசாரணை
பொள்ளாச்சி விவகாரத்தின் பதட்டம் தணிவதற்குள் இந்த சோகம் கோவைப் பகுதி மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த விஜயக்குமார் என்பவரை கைது செய்யப்பட்டு, விசாரணையை நடத்தி வருகின்றார்கள்.
ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில் 4 காவல் ஆய்வாளர்கள், 6 துணை ஆய்வாளர்கள் தலைமையில் 10 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்ஸோ மற்றும் கொலை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடந்து வருகிறது.
விசாரணை மிகவும் துரிதமாக நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளியை விரைவில் கண்டறிய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் துடியலூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.