கோவை உருமாண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் மற்றும் ரம்யா தம்பதியின் இளைய மகன் லோகித் (6). இரண்டாம் வகுப்பு படிக்கிறார்.
Advertisment
பள்ளியில் சேர்ந்த நாள் முதலிலேயே சிறுவன் லோகித்க்கு படிப்பில் அதிக ஆர்வம். வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை நினைவில் வைத்து எளிதாக மனப்பாடம் செய்து விடுவார்.
வழக்கமாக ஆங்கிலத்தில் குழந்தைகள் அதிகம் தடுமாறும் நிலையில், சிறுவன் லோகித் அசாத்தியமாக அதனை படித்திருக்கிறார்.
இதனை கவனித்த ஆசிரியர் தர்மதேவ், மிஸ்டர் தேவ்ஸ் இன்டர்நேசனல் அகாடமியின் உரிமையாளர் லோகித்தின் திறமையை புரிந்துகொண்டு சரியான முறையில் பயிற்சி அளித்தார்.
மேலும் பெற்றோரும் பொது அறிவை மேம்படுத்தும் வகையில் கூடுதலான தகவல்களை கற்று தர ஆரம்பித்தனர்.
குறிப்பாக உலகில் உள்ள நாடுகளின் பெயர்களை கற்றுத் தந்த அவர்கள், அதற்கான ஸ்பெல்லிங்கையும் சொல்லிக் தந்தனர்.
ஆறு மாத காலம் பயிற்யில் சிறுவன் ஈடுபட்டிருக்கின்றார்.
உலகில் உள்ள பெருவாரியான நாடுகளின் பெயர்களை கற்ற சிறுவன் லோகித்,, அதிவேகமாக நாடுகளின் பெயர் மற்றும் ஸ்பெல்லிங் உச்சரித்தார்.
இதனை அங்கீகரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் ("FASTEST KID TO RECALL SPELLINGS OF ALL COUNTRIES") என்று சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.
தன் நினைவாற்றலால் ஆங்கில உச்சரிப்பில் அசத்தும் சிறுவனை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“