பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்து வந்த கொரோனோ பாதிப்பு தற்போது மீண்டும் பரவி மக்களை தாக்கி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனோ தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், கோவையில் கடந்த இரண்டு வாரத்துக்கு பிறகு கொரோனாவுக்கு மூதாட்டி ஒருவர் பலியானார். கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவர் கொரோனோ பாதிப்பு காரணமாக கடந்த 15 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் கொரோனோவுக்கு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதன் மூலம் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 3 லட்சத்தி 42 ஆயிரத்தி 311 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் நேற்று 43 பேர் குடைமடைந்து உள்ளனர். தற்போது 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil