தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர் அந்த வகையில், கோவையில், அதிமுக கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்.பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடி வாக்குகள் சேகரித்தார்.
கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஆணைகட்டி, மாங்கரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சாரத்தின்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கோவை நாடாளுமன்ற வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து உற்ச்சாக வரவேற்பளித்தனர். மாங்கரையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சிங்கை ராமச்சந்திரனுக்கு பழங்குடியின மக்கள் தங்களுடைய பாரம்பரிய இசையை இசைத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும் கழக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனும் பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடி வாக்குகளை சேகரித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“