/indian-express-tamil/media/media_files/2025/09/10/kovai-2025-09-10-20-21-06.jpg)
கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரைக்கு வந்துள்ளார். இதை அடுத்து இன்று காலை விவசாயிகள், வியாபார சங்கங்கள் மற்றும் தொழில் வர்த்தக சபை ஆகியோருடன் கருத்து கேட்கும் கூட்டம் தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தமிழகத்தில் கல் இறக்க கருத்து கூற வந்த விவசாயிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது கருத்து கூற வந்த விவசாயி தங்களை அழைத்துப் பேச கூப்பிட்டு அவமதிப்பதாக கூறி கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
பின் விவசாயி பாலசுப்பிரமணியம் கூறுகையில் கூட்டம் எனக் கூறி கருத்துக்கள் எதுவும் கூற விடாமல் தங்களை அவமதித்ததாக கூறினார். மேலும் அருகில் இருக்கும் கேரளா மாநிலத்தில் கள் இறக்க விவசாயிகளுக்கு அனுமதி உண்டு ஆனால் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் பெயரளவில் 10 பேருக்கு நீராபானம் அனுமதி அளித்து தற்போது அதை பெருமையாக பேசுகிறார்கள் என்றார்.
மேலும் கள் இறக்க எனக்கு அனுமதி வேண்டி அதிமுக ஆட்சி காலத்தில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை தற்போது கருத்து கூற வந்த விவசாயிகளை கருத்து கூற விடாமல் தடுத்தது மிகவும் வருத்தமாக உள்ளது என தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.