கரூர் சம்பவம்; சட்டப் பேரவையில் புதிய தகவல் சொல்லும் ஸ்டாலின்: அண்ணாமலை காட்டம்

கோவையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபின் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

கோவையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபின் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

author-image
WebDesk
New Update
annamalai press meet

கோவை வரதராஜபுரம் பகுதியில் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு சரோஜினி அம்மாள் நினைவு பெண் குழந்தைகள் கல்வி நிதி வழங்கும் விழா பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமர் ராமசாமியின் உத்தம் அறக்கட்டளையின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு உதவி தொகை வழங்கினார்.

Advertisment

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய அண்ணாமலை, பயணத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் ஒரு பணக்காரர் பட்டியல் மாறும் நிறுவனங்கள் மாறும் என்றும். அமெரிக்காவில் பணவீக்கம் என்பது தற்பொழுதுதான் வந்துள்ளது என்றும் 20 ஆண்டுகளுக்கு முன்பு பணவீக்கம் இல்லை. அமெரிக்காவில்  தந்தைக்குப் பிறகு குழந்தைக்கு பணம் சொத்து ஆகியவை செல்லும் பொழுது அதற்கு 50% வரி விதிக்கப்படுவதாகவும் இது இந்தியாவிலும் வரும் என்று குறிப்பிட்டார். 

பின்லாந்து அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் பள்ளி குழந்தைகளின் படிப்பு செலவை அரசு முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறது என்றும் ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா கல்வி மற்றும் மருத்துவத்தில் தோற்று உள்ளது என்றார். எல்லோருக்கும் சமமான கல்வி கொடுக்க வேண்டும் என்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நீட் பயிற்சி வழங்கப்படுகிறது சிவில் சர்வீஸ் செக்கு பணம் கொடுத்து படிக்க முடிகிறது என்று தெரிவித்த அவர் இப்படி இருந்தால் ஏழை குழந்தைகள் எப்படி சிவில் சர்வீஸ் படிப்பார்கள் என கேள்வி எழுப்பிய அவர் இதனை அரசு கவனிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கரூர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பேசும் பொழுது வழக்கம் போல அரசின் மீதும் காவல்துறை மீதும் தவறு இல்லை என்று குறிப்பிடுகிறார். கரூரில் 606 காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளதாக முதலமைச்சர் கூறும் நிலையில் ஏடிஜிபி டேவிட்சன் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கூறியதாகவும் ஆனால் தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பிறகு அளித்துள்ள அறிக்கையில், 350 என்று குறிப்பிடுகிறார்கள் என்று தெரிவித்தார். இந்த வழக்கம் சிபிஐக்கு மாற்றப்பட்ட பிறகு முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதாகவும் குறிப்பிட்டார். இது சம்பந்தமாக முன்னுக்குப் பின் முரணாக முதலமைச்சர் பேசுவதை விட்டுவிட்டு சிபிஐ க்கு ஆதரவு கொடுத்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து வெளியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். 

Advertisment
Advertisements

உடற்கூறாய்வு செய்த நேரத்தை வைத்து பார்க்கும் பொழுதும் சரியாக இல்லை என்ற உச்சநீதிமன்றம் கூறியதற்கு முதல்வர் சட்டப்பேரவையில் 24 மருத்துவர்கள் கொண்டு உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது என்று புதிதான ஒரு விளக்கத்தை அளிக்கிறார் என்று தெரிவித்தார். முதல்வரும் துணை முதல்வரும் அங்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு மாலை அணிவித்து போட்டோ எடுக்க வேண்டும் என்பதற்காகவே அவசரகதியில் அந்த உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டதாக தான் நாங்கள் கருதுவதாக தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் இவர்கள் எதையோ மறைத்து எதையோ செய்ய போய் எங்கேயோ சென்று மாட்டிக் கொண்டார்கள் என்றும் எக் காரணத்தை கொண்டும் சிபிஐ விசாரணை இதில் நடத்தக் கூடாது என்ற தலைகீழாக நின்றார்கள் ஆனால் இன்று அது நடக்கிறது மாட்ட போகிறார்கள் என்று தெரியும் என்று கூறினார். 

திருமாவளவன் விவகாரம் தொடர்பான கேள்விக்கு அந்த இருசக்கர வாகனத்தில் கார் அடித்தது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்றும், இதையெல்லாம் மறைத்து திருமாவளவன் முதல்வரை சந்தித்தது எல்லாம் இவர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக தான் ஆட்சி நடப்பது போன்று இருப்பதாக தெரிவித்தார்.  இதற்கு பின்னாடி நான் இருந்தேன் என்று கூறுகிறார் ஆனால் எனக்கு அந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவரை தெரியாது சாமானிய மக்களுக்காக குரல் கொடுக்கிறேன் திருமாவளவன் நாகரிகமான அரசியலுக்கு வர வேண்டும் என கூறினார்.

இது போன்ற வன்முறை வெறுப்பு அரசியல் மிரட்டுவது போன்றவை செய்யும் இவர்களெல்லாம் தமிழ்நாட்டில் எந்த ஒரு மாற்றத்தை அளிக்க போகிறார்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படுவது கிடையாது என்றும் அண்ணாமலை ஒரு அடி அடித்தால் 2 அடி கொடுக்கின்ற ஆள் என்றும் கூறினார். இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள் என தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் முதல்வர் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை என்றால் எதற்காக அந்த பதவியில் இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். 

கரூர் விவகாரத்தில் தவெக நிர்வாகி ஒருவருக்கு வேகமாக ஜாமீன் கிடைத்துள்ளது என்றால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் சரியாக அளிக்கப்படவில்லை என்றுதான் அர்த்தம் என தெரிவித்தார். இந்தியாவில் எந்த மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் நடந்திருந்தாலும் காவல் கண்காணிப்பாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்துவிட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர் முதலமைச்சராக கூட செய்யவில்லை என தெரிவித்தார்.

மணிப்பூரில் கலவரம் நடந்த பொழுது மணிப்பூருக்கு வெளியில் இருந்த காவல் அதிகாரிகளை எஸ்ஐடியில் உச்ச நீதிமன்றம் போட்டதாகவும் அப்பொழுது மணிப்பூர் அரசு இது பற்றி கேள்வி எழுப்பினார்களா என கூறினார். இதில் தமிழ்நாட்டில் இல்லாத இரண்டு சிபிஐ அதிகாரிகளை நியமிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் கூறுவதில் என்ன தவறு உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். 

சபாநாயகர் திமுகவை டிபன்ஸ் செய்து நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார் என்றும் ஆனால் சபாநாயகர் வேலையை ஒரு நாளும் செய்யவில்லை என சாடிய அவர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கொண்டு திமுகவிற்கு தான் வேலை செய்தார் என குற்றம் சாட்டினார். இன்றைய சட்டப்பேரவையில் கூட பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் போது மைக் ஆப் செய்து உள்ளார்கள் என்றும் அவர்கள் பேசும் பொழுது ஏளனமாக பார்ப்பது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருவதாகவும் இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு பேட்ச் அணிந்து செல்லும் பொழுது அதனையும் கேவலமாக சித்தரித்து உள்ளார்கள் என்றும் அந்த அளவு தான் மனிதாபிமானம் உள்ளது என தெரிவித்தார்.

இது போன்ற தினமும் செய்து கொண்டிருந்தால் மக்கள் எப்படி ஓட்டு போடுவார்கள் மக்கள் எப்படி உங்கள் பக்கம் வருவார்கள் என கேள்வி எழுப்பினார் இதற்கு மக்கள் மன்றத்தில் தான் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இன்றைய தினம் ரவுடிகள் எல்லாம் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருப்பதாகவும், ஆனால் காவல்துறையினர் யூடியூப் காரர்கள் மீது வழக்கு பதிவு செய்வது கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு சரி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 

மேலும் கரூர் சம்பவத்தில் எந்த கட்சியாக இருந்தாலும் நான் என்ன கூறினேனா அதைத்தான் கூறி இருப்பேன் என்றும் அது திமுகவின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் நான் என்ன கூறினேனோ அதைத்தான் கூறு இருப்பேன் என தெரிவித்தார். மேலும் விஜய்க்கோ வேறு யாரோ ஒருவருக்கோ ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என தெரிவித்தார். 

கரூரில் மூன்று மணியிலிருந்து பத்து மணி வரை அனுமதி கடிதம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் தானே என கேள்வி எழுப்பினார். மேலும் அந்த விவகாரத்தில் கரூர் எஸ் பி அல்லது மாவட்ட ஆட்சியர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தால் நான் இது பற்றி பேசியிருக்க மாட்டேன் என்று தெரிவித்தார். கரூர் எஸ்பி அல்லது மாவட்ட ஆட்சியர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தால் முதல் அமைச்சரை பாராட்டி இருப்பேன் எனவும் கூறினார். 

முதலமைச்சருக்கு ஆங்கிலம் தெரியாது ஃபாஸ்கான் காரருக்கு தமிழ் தெரியாது ஆனால் டி ஆர் பி ராஜா அவர்கள் வந்தவுடன் முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்து 15 ஆயிரம் கோடி பல்வேறு வேலை வாய்ப்புகள் என்று கூறி வருவதாகவும், ஃபாஸ்கான் அழைத்ததற்காக வரவில்லை ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்து தான் வந்துள்ளோம் என்று கூறி இருக்கிறார்கள் என்றும் அந்த நிறுவனம் உண்மையை பேசிய பிறகு தமிழக அரசுக்கு பிரச்சனை வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் டிஆர்பி ராஜா நன்கு முதலமைச்சரை ஏமாற்றுகிறார் என்றும், ஆனால் அண்டை மாநிலங்களில் சத்தமே இல்லாமல் ஆயிரம் கோடிகள் உள்ளே வருகிறது என்றும் தெரிவித்த அவர் திராவிட மாடல் என்று கூறிய விளம்பரப்படுத்தி மாட்டிக்கொண்டார்கள் என தெரிவித்தார். டிஆர்பி ராஜா பேச்சை குறைத்து விட்டு செயலில் அதிகமாக ஈடுபட வேண்டும் என்றும் அந்த கான்ட்ரவர்சி அதிகமாக பேசியதன் விளைவு தான் என்று தெரிவித்தார். 

மெகா கூட்டணி மகா கூட்டணிக்காக விஜய் க்கு ஆதரவாக பாஜக செயல்படுகிறது என்று முதல்வர் தெரிவித்த கருத்து குறித்தான கேள்விக்கு, தமிழ்நாட்டில் நியாயத்தை பேசினாலோ தர்மத்தை பேசினாலோ கூட்டணி ஆட்சியா? என கேள்வி எழுப்பினார். சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் கேள்வி எழுப்பும் பொழுது அவர்கள் கூறும் பதிலில் மக்கள் சமாதானம் ஆகிறார்கள் என்பதை எல்லாம் மக்கள் தான் முடிவு செய்வார்கள் எனவே அதனை மக்கள் மன்றத்தில் வைத்து விடுகிறேன் என தெரிவித்தார். 

கரூர் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கூறி இருக்கக்கூடிய மருத்துவர்களின் எண்ணிக்கைக்கும் கேபிள் எண்ணிக்கைக்கும் 39 நபர்களுக்கும் சம்பந்தமில்லை என்பதுதான் எங்களுடைய ஆர்க்யூமெட் என தெரிவித்தார். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அறிக்கையை தான் உச்ச நீதிமன்றம் கேள்வியாக எழுப்பியுள்ளது அதைத்தான் நாங்களும் கேள்வியாக எழுப்பி உள்ளோம் என்றும் தெரிவித்தார். 

தமிழகத்தில் பெண்களுக்கு அதிகமான கல்வியை வழங்குகிறோம் என்றால் ஒரு பெண்ணுக்கு கல்வியை கொடுப்பதன் மூலமாக அந்த முழு குடும்பம் முன்னேறுகிறது என்றும் அதனால் தான் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் அதிக பெண்கள் கல்வி கற்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருக்கும் மேல் படிப்பிற்கு அதிகமான பெண்கள் செல்லக்கூடிய மாநிலமும் தமிழ்நாடு தான் மேல் படிப்பு படித்துவிட்டு வேலைக்கு போகின்ற மாநிலமாகவும் தமிழ்நாடு தான் இருக்கிறது என தெரிவித்த அவர் இது போதாது தமிழ்நாடு இந்தியாவிற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் இந்தியா உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக மாற வேண்டும் எனவே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். பல்வேறு நாடுகளுக்குச் சென்று இது குறித்து அறிந்து விட்டு தமிழ்நாட்டில் இது போன்ற ஒரு நல்ல திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உடன் ஒரே விமானத்தில் வந்தது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், கடந்த முறை நான் இங்கிருந்து செல்லும் பொழுது அதே விமானத்தில் முதலமைச்சர் பயணித்தார் அப்பொழுது விமானத்தில் அவருக்கு மரியாதை செலுத்தினேன். கோவையில் பல்வேறு திட்டங்களை அளித்ததற்கு நன்றிகளை தெரிவித்ததாகவும் ஆனால் அரசியல் வேறு அது வேறு என கூறினார். அதேபோன்று இன்று செங்கோட்டையன் நான் பயணித்த விமானத்தில் வந்தார் ஆனால் அவர் ஏறியவுடன் உறங்கி விட்டார் நான் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன் அதற்கு சாட்சி ஏரோஸ்டர் மட்டும்தான் என தெரிவித்தார். 

விஜய்க்கு காவி சாயம் பூசப்படுவதாக பலரும் கருத்தை தெரிவித்து வருவது குறித்தான கேள்விக்கு விஜயின் சித்தாந்தம் வேறு எங்களுடைய சித்தாந்தம் வேறு அது உடன் முடிந்து விட்டது. ஆனால் ஒரு நியாயத்திற்காக உண்மையை பேசுவது என்னை பொறுத்தவரை தவறில்லை அதில் அரசியல் சாயம் எல்லாம் சேர்த்து பூசி வருவது அழகில்லை என்றுதான் பார்க்கிறேன் என தெரிவித்தார். பழைய இடத்தில் பல்லாரை பாராட்டி இருக்கிறோம் பல பேரின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளோம் அப்படித்தான் நீங்களும் இதனை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: