/tamil-ie/media/media_files/uploads/2020/06/cats-13.jpg)
Coimbatore Annapoorna hotel lost 60% regular customers after covid19 lockdown
Coimbatore Annapoorna hotel lost 60% regular customers after covid19 lockdown : கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும் வகையில் இந்திய அரசு மார்ச் மாதம் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. மே மாதம் 18ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் இருந்து சில தளர்வுகள் தற்போது அமலில் உள்ளது. ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் பெரும் அளவில் பாதிப்பை சந்தித்தது ஆனால் தற்போது சில முக்கிய விதிமுறைகளை பின்பற்றி தொழில்களை துவங்க அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு.
உணவகத்திற்குள் செல்வதற்கு முன்பு வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் முகவரி பெறப்படுகிறதுகோவையின் புகழை நிலைநிறுத்தும் பல்வேறு அம்சங்களில் மிக முக்கியமாக இருக்கிறது கோவை அன்னபூர்ணா உணவகம். ரத்தின சபாபதிபுரம் என்று அழைக்கப்படும் ஆர்.எஸ். புரத்தில் லைட் ஹவுஸ் என்ற திரையரங்கை திறந்தார் சாமிக்கண்ணு வின்சென்ட். அவர் 1914-காலத்தில் துவங்கிய 12 திரையரங்குகளில் இதுவும் ஒன்று. இந்த திரையரங்கு இன்று பலராலும் கென்னடி திரையரங்கம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு மிக சிறிய அளவில் ”அன்னபூர்ணா” உணவகம், கேண்டீனாக, கே. தாமோதரசாமியால் ஆரம்பிக்கப்பட்டது.
உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளருக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறதுஅன்றைய நாளில் இருந்தே படம் பார்த்துவிட்டு திரும்பும் நபர்களுக்கு அன்னபூர்ணா கேண்டீனில் ஏதேனும் ஒரு சிற்றுண்டியை உண்ணாமல் போனால் அந்த படமும் ஆர்.எஸ்.புரம் விசிட்டும் முழுமையடையாது. 1968ம் ஆண்டு முழுமையாக உணவகமாக அன்னபூர்ணா உருவம் பெற்றது. அன்றைய நாள் துவங்கி இன்று வரை அன்னபூர்ணாவிற்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் தான் அன்னபூர்ணாவின் பலமே. ஆனால் இன்று அத்தகைய வாடிக்கையாளர்களையே இழந்து வருகிறது அன்னபூர்ணா உணவகம். காரணம் கொரோனா.
சானிட்டைஸரும் கட்டாயம் தான்மேலும் படிக்க : வறுமையும் வயோதிகமும் சேவைக்கு தடையில்லை: வாழும் உதாரணமாக கமலாத்தாள் பாட்டி
கொரோனாவிற்கு பிறகு அன்னபூர்ணா!
காலை 6 மணி முதலே பரபரப்பாக இயங்கிய அன்னபூர்ணாவின் தற்போதைய நிலை என்ன? 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும் அன்னபூர்ணா கொரோனா ஊரடங்கிற்கு பின்னால் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து நம்மிடம் விளக்கினார் கோவை ஆர்.எஸ் புரம் அன்னபூர்ணா கிளையின் மேலாளர் ராஜேஷ்.
கோவையில் மொத்தமாக 12 இடங்களில் அன்னபூர்ணா உணவகமும், சில இடங்களில் அன்னபூர்ணா ஸ்வீட் ஸ்டால்களும் இயங்கி வருகிறது. ராமநாதபுரம் மற்றும் ராமகிருஷ்ணா கல்லூரி அருகே இயங்கி வரும் அன்னபூர்ணா கிளைகள் ஏற்கனவே குறைந்த அளவிற்கு வருமானம் ஈட்டும் கிளைகளாக இருந்ததால் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திறக்கப்படவில்லை. அதனால் மொத்தம் 10 கிளைகளில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மே 6ம் தேதியில் இருந்து பார்சல் உணவு சேவைகள் ஆரம்பமானது. ஆனால் 73 நாட்கள் கழித்து தான் ஜூன் 8ம் தேதி முதல் டைன்-இன் சேவைகள் துவங்கியது.
உணவு பரிமாறும் நபர்களுக்கு முகக்கவசம் மற்றும் ஃபேஸ் ஷீல்ட் கொடுக்கப்பட்டுள்ளதுகொரோனா ஊரடங்கிற்கு முன்பு வந்த வாடிக்கையாளர்கள் பலரும் தற்போது உணவகத்திற்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். காலையில் 6 மணிக்கு அன்னபூர்ணாவில் காஃபி குடித்துவிட்டு தான் அடுத்தக்கட்ட வேலையே என்று கூறிய நபர்கள் பலரும் தற்போது ஞாயிற்று கிழமையன்று காலையில் தான் வருகிறார்கள். மேலும் சாய்பாபா காலனி, ராஜவீதி, கோவை மாவட்ட நீதிமன்றம் அருகே அமைந்திருக்கும் கிளை, மற்றும் ஆர்.எஸ். புரம் கிளைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வந்த வாடிக்கையாளர்களில் 40% மட்டுமே தற்போது உணவகங்களுக்கு வருகை புரிகின்றனர். ஏற்கனவே ஃப்ளோட்டிங் கஸ்டமர்களை முற்றிலுமாக இழந்த அன்னபூர்ணாவில் தற்போது 25 முதல் 30% வரை மட்டுமே தொழில் நடக்கிறது என்கிறார் ராஜேஷ்.
மேலும் படிக்க : மீண்டும் ஒளி வீசுமா ஒப்பணக்கார வீதி? கோவை கள நிலவரம்
தற்காப்பு நடவடிக்கைகள்
தனிமனித இடைவெளி
தனிமனித இடைவெளியை மிகவும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் வலியுறுத்திய நிலையில் ஒரு மீட்டர் இடைவெளியில் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக 110 மேஜைகள் வைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்ட இடத்தில் தற்போது வெறும் 55 மேஜைகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றால் மட்டுமே ஒரே மேஜையில் உணவு பரிமாறப்படும். இல்லாத பட்சத்தில் ஒரு மேஜைக்கு இருவர் என்ற ரீதியில் உணவு பரிமாறப்படுகிறது. முற்றிலும் வேறு இரண்டு வாடிக்கையாளர்கள் உணவு உண்ண வருகின்றார்கள் என்றால் அவர்களுக்கு இடையே டேபிள் பார்ட்டீசன் போடப்பட்டுள்ளது. அதே போன்று உணவு தயாரிக்கும் இடத்திலும் ஒரு மீட்டர் என்ற தனிமனித இடைவெளி பயன்படுத்தப்படுகிறது. அதற்காக சமைக்கும் உபகரணங்களும் இடைவெளிவிட்டு இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
டேபிள் பார்ட்டீசனுடன் தயாராக உள்ள உணவு மேஜைஉணவகத்தில் பின்பற்றப்படும் சுகாதாரம்
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை கிருமி நாசினி கொண்டு உணவகம், சமையலறைகள் மற்றும் கழிவறைகள் சுத்தம் செய்யப்படுகிறது என்று கூறிய ராஜேஷ் , அனைவராலும் பயன்படுத்தப்படும் உப்பு, மிளகு ஜாடிகள், நேப்கின் ஸ்டேண்டுகள், மற்றும் சாஸ் பாட்டில்கள் என அனைத்தையும் மேஜைகளில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது, வாடிக்கையாளர்களின் சுகாதாரத்தில் விளையாட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் என்று கூறுகிறார்.
சுடுதண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்படும் தட்டுகள் மற்றும் இதர பாத்திரங்கள்”அன்னபூர்ணா துவங்கப்பட்ட நாளில் இருந்தே எங்கள் கடைகளில் வாடிக்கையாளர்களுக்காக வைக்கப்படும் தட்டு, டம்ளர், ஸ்பூன் போன்ற அனைத்தையும் நாங்கள் சுடுதண்ணீர் கொண்டு சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம். கொரோனா எச்சரிக்கைக்கு பிறகு நாங்கள் அதில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்” என்று அவர் கூறினார்.
வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விதிமுறைகள் என்ன?
அன்னபூர்ணாவிற்கு வரும் ஒவ்வொருவருக்கும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போன்று உணவகத்திற்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. அவர்களுக்கு சானிடைஸ்டர் வழங்கப்படுகிறது. ஊழியர்கள் அரைமணி நேரத்திற்கு ஒரு முறை அவர்கள் கையை சானிடைஸரால் சுத்தம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் உணவகத்திற்கு வரும் போதே அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் வாங்கப்படுகிறது.
தொழில் மும்முரமாக நடைபெறும் பகல் 1 மணி வேளையிலும் கூட்டம் இன்றி காணப்படும் உணவகம்உணவகத்தில் உணவு பரிமாறும் நபர்களுக்கு முககவசங்கள், ஃபேஸ் ஷீல்டுகள் மற்றும் கையுறைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது எனவே ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் தொற்றும் அபாயம் ஏதும் இல்லை. அதே நேரத்தில் இங்கிருந்து தங்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் அங்கே முறையே தங்களின் கைகளை சானிடைஸர் கொண்டு சுத்தம் செய்து கொள்வதையும் நிர்வாகம் உறுதி செய்கிறது.
வாடிக்கையாளருக்கு எடுத்துச் செல்லப்படும் காஜூ கட்லிவேலை இழக்கும் அபாயம் & ஏற்பட்டிருக்கும் சிக்கல்
அதிக அளவில் வாடிக்கையாளர்கள் முன்பு போல் உணவகத்திற்கு வராத காரணத்தால் தற்போது 40% வரை தொழிலாளர்களை நிறுத்தி வைத்துள்ளது அன்னபூர்ணா நிர்வாகம். யாரையும் வேலையில் இருந்து அனுப்பும் எண்ணம் ஏதும் எங்களுக்கு இல்லை. ஆனால் தற்போது இருக்கும் சூழலில் இருந்து மீண்டு வரும் பட்சத்தில் அனைவரையும் வேலைக்கு திரும்ப எடுத்துக் கொள்வோம் என்று உத்தரவாதம் அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருக்கும் ஊழியர்களுக்கு தற்போது ஊதியம் தரப்படவில்லை. அதே போன்று வேலைக்கு வரும் ஊழியர்களின் சம்பளத்தில் 10% வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது .
வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்சுகாதார பணிகளுக்காக செலவிட்டப்பட்ட தொகை தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கிருமி நாசினிகள், கையுறைகள், முக கவசங்கள், ஷீல்டுகள், ஃப்ளோர் கிளீனர் என அனைத்தும் உயர் தர நிறுவனங்களில் இருந்து பெறப்படுகிறது. அதனால் கொஞ்சம் கூடுதல் செலவு. காலை 6 மணி முதல் இரவு 10:30 மணி வரை இயங்கிக் கொண்டிருந்தது எங்களின் உணவகங்கள் அனைத்தும், தற்போது, இயங்கும் நேரம் மாற்றப்பட்டதால் இரவு 8 மணிக்கெல்லாம் மூடப்பட்டுவிடுகிறது. இதனால் நாங்கள் எங்களின் ”டின்னர் பிஸினஸை” முற்றிலுமாக இழந்துவிட்டோம். பார்ட்டி ஆர்டர்களுக்கும் அனுமதி அளித்தாலும் அது உதவிகரமாக இருக்கும் . கால நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டால் எங்களுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும். இந்த இக்கட்டான சூழலில் வரிச் சலுகை, ஜி.எஸ்.டியில் சலுகை கிடைக்குமானால் ஓரளவிற்கு சமாளிக்கும் நிலையை எட்டுவோம் என்றும் அவர் கூறினார்.
வாடிக்கையாளர்கள் கருத்து
கோவைப்புதூரில் இருக்கும் வெங்கட சுப்பிரமணியம் கடந்த 35 ஆண்டுகளாக அன்னபூர்ணாவில் காஃபி குடிப்பதையும் உணவு அருந்துவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். கடந்த 73 நாட்களாக அன்னபூர்ணாவிற்கு வருகை புரிவதை வெகுவாக ”மிஸ்” செய்ததாக தெரிவிக்கிறார்.
35 வருடங்களுக்கும் மேலாக அன்னபூர்ணாவிற்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள்தன் வாழ்வின் ஒரு அங்கமாகவே இருக்கும் அன்னபூர்ணாவிற்கு கடந்த 40 ஆண்டுகளாக வருவதாக தெரிவிக்கிறார் அனாமிகா. இத்தனை வருடங்களில் இந்த 73 நாட்கள் அன்னபூர்ணாவிற்கு வராமல் இருந்தது குறித்து தெரிவிக்கும் அவர் எப்போதுமே தன்னுடைய நாளை அன்னபூர்ணா காஃபியின் மூலம் துவங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். குடும்பத்துடன் தரமான உணவை உட்கொள்ள அவர்கள் தேர்வு செய்யும் இடமாக அன்னபூர்ணா இருப்பதை தெரிவிக்கும் அவர் மக்கள் தொடர்ந்து இங்கு வர வேண்டும். சுகாதாரமான முறையில் அவர்கள் உணவு தயாரிக்கின்றார்கள். மற்ற கடைகளாக இருந்தால் கூட மக்கள் யோசித்துக் கொண்டு வராமல் போய்விட வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அன்னபூர்ணா அவ்வாறு இல்லை என்று கூறுகிறார். மக்கள் சுகாதாரமான முறையில் இருந்து தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்று கூறுகிறார்.
சிறுவயதில் இருந்தே அன்னபூர்ணாவிற்கு வருகை தரும் அனாமிகா மற்றும் அவருடைய மகன்தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
ஹோட்டல் என்றாலே ஜாலி தான். உணவு அருந்துவதை காட்டிலும் நமக்கு பிடித்த நபர்களுடன் நேரம் செலவிட்டு எஞ்சாய் செய்யும் இடமாக இருக்கும். கொரோனா ஊரடங்கிற்கு பிறகான நாளில், உணவகங்களுக்கே இருக்கும் களையற்று இருக்கிறது அன்னபூர்ணா என்று வருத்தம் தெரிவிக்கிறார் மேலாளர்.
மேலும் படிக்க : யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது? தமிழக பாகன்களின் கதை தெரியுமா உங்களுக்கு?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us