Advertisment

இடிந்து விழும் நிலையில் மேல்நிலைப்பள்ளி கட்டிடம்: கவனிக்குமா அரசு?

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கோவை அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம் ஆபத்து ஏற்படும் முன் இடித்து அகற்ற பொதுமக்கள் வலியுறுத்துள்ளனர்.

author-image
WebDesk
Nov 09, 2023 17:27 IST
New Update
Coimbatore Annur high school building critical condition Tamil News

இந்த கட்டிடத்தின் அருகே விளையாட்டு மைதானமும் உள்ளதால் விளையாடுவதற்கு இப்பகுதிக்கு வரும் விளையாட செல்லும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

coimbatore: கோவை மாவட்டம் அன்னூரில் அவிநாசி சாலையில் நாகம்மா புதூர் பகுதியில் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் அருகே பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று பாழடைந்த மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. பழுதான  கட்டிடத்தில் சுவர்கள் மேற்கூரைகள் என அனைத்தும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை உள்ளது.

இந்த கட்டிடத்தின் அருகே விளையாட்டு மைதானமும் உள்ளதால் விளையாடுவதற்கு இப்பகுதிக்கு வரும் விளையாட  செல்லும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு  இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

 

 

 

 

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment