/indian-express-tamil/media/media_files/fbAQKJ4iRGgFI8lTfxDg.jpg)
பி.எஸ்.ஜி தொழில்நுட்பகல்லூரி முன்பு, புதிய சிக்னல் திறக்கப்பட்டது.
கோவை, அவினாசி சாலையிலுள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பகல்லூரி முன்பு, புதிய சிக்னல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. அங்கே விரைவில் பாலம் இடிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவினாசி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், அவினாசி ரோட்டில் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் என்ற நீண்ட தூர மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
சுமார் 1,627 கோடி ரூபாய் செலவில் தொடங்கிய இந்த பணிகளுக்காக மேம்பால தூண்கள் மற்றும் இணைப்பு கர்டர்கள் அமைக்கும் பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது. அண்ணா சிலை, நவ இந்தியா சந்திப்பு, ஹோப் காலேஜ், விமான நிலைய ரோடு சந்திப்பு பகுதியில் வாகனங்கள் ஏறி இறங்கும் வகையிலான ரேம்ப் அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது.
மேம்பால பணிக்காக அவினாசி ரோட்டில் இரண்டு புறமும் பல்வேறு இடங்கள் கையகப்படுத்தப்பட வேண்டி இருக்கிறது. சர்வீஸ் ரோட்டிற்காகவும் அந்த சாலையில் இடம் தேவைப்படுகிறது. பெரிய கட்டிடங்கள் எதுவும் இடிக்கப்படமாட்டாது. ஆனால் காம்பவுண்ட் சுவர் மற்றும் கட்டிடங்களின் சிறு பகுதியை இடித்து நிலம் கையகப்படுத்தி அதற்கான பணிகளை தற்போது வேகமாக செய்து வருகிறார்கள்.
மாநில, நெடுஞ்சாலைத்துறை கட்டிடங்கள் இடிப்பு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக சுமார் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேம்பால பணிகள் இதுவரை 6 கிமீ தூரம் வரை முடிந்துள்ளது. இன்னும் 4 கிமீ தூரம் வரை இணைப்பு கான்கிரீட் தளம் அமைக்கப்பட வேண்டிய பணிகள் இருக்கிறது.
காலை, மாலை, இரவு என பீக் அவர் நேரங்களில் வாகனங்களில் பணி நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். பணி நடக்கும் இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மேம்பால பணிக்காக பி எஸ் ஜி தொழில்நுட்பக்கல்லூரியின் மதில் சுவர் இடிக்கப்பட இருக்கிறது. மேலும் கல்லூரி விடுதியை இணைக்கும் பாலமும் இந்த வாரத்திற்குள் இடிக்கப்பட இருக்கிறது. முதல்கட்டமாக , அவினாசி சாலையிலுள்ள பி எஸ் ஜி தொழில்நுட்பகல்லூரி முன்பு புதிய சிக்னல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. பாலம் மூடப்பட்டது. விரைவில் பாலம் இடிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவினாசி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.