/indian-express-tamil/media/media_files/2025/10/07/covai-gt-naidu-flyover-1-2025-10-07-14-43-34.jpg)
தமிழ்நாட்டிலேயே மிக நீளமான பிரம்மாண்ட புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானி ஜி.டி நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் அக்டோபர் 9-ம் தேதி திறந்து வைக்கப்பட உ ள்ளது.
கோவை மாவட்டம், அவினாசி சாலையில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதி அடைந்து வந்தனர். எனவே, இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், அந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. அதன்படி, மாவட்ட நிர்வாகமும் மேம்பாலம் கட்டுவதற்கு முடிவு செய்தது. அதன்படி, ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் கடந்த 2020-ம் ஆண்டு அவினாசி சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.
இந்தப் பாலமானது உப்பிலிபாளையம் முதல் கோல்ட் வின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் 4 வழிச் சாலையாக இருக்கும். இந்த பாலமானது தமிழ்நாட்டின் முதல் நீண்ட தொலைவுடைய மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலத்தில் விளக்குகள் பொருத்தும் பணி உள்ளிட்டவை முடிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் வாகனங்களை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த அவினாசி பாலமானது 17.25 மீட்டர் அகலம் கொண்டது. சுமார் 305 பில்லர்களுடன் இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளின் வசதிக்காக ஹோப் கல்லூரி, நவ இந்தியா, அண்ணா சிலை, விமான நிலையம், ரெசிடென்சி ஓட்டல் ஆகிய இடங்களில் ஏறு தளம் மற்றும் இறங்கு தளம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை தவிர்த்து மற்ற அனைத்து பணிகளும் முடிவு அடைந்து உள்ளன. மேம்பாலத்தின் திறப்பு விழா நாளை மறுநாள் அக்டோபர் 9-ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது.
இதனால், அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று தெரிகிறது. தமிழ்நாட்டில் முதல் நீண்ட தூர பாலமாக அவினாசி சாலை மேம்பாலம் அமைந்து உள்ளது. இந்தப் பாலத்தின் பணிகள் நீண்ட நாள்களாக முடிவடையும் என்று சொல்லப்பட்டு வந்தது.
தற்போது, அந்த பாலத்துக்கான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு நாளை மறுநாள் 9-ம் தேதி திறக்கப்படுகிறது. பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கோவை மாவட்டத்தில் நாளை மறுநாள் 9-ம் தேதி கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் உலகளாவிய தொடக்க நிலை உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக வரும் முதல்வர் மு க ஸ்டாலின் அன்று காலை கோல்ட் வின்ஸ் பகுதியில் உள்ள அவிநாசி சாலை மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.
இது குறித்து முதல்வர் அவரது சமூக வலைதள பக்கத்தில் இந்த பாலத்தின் பெயர் ஜி.டி நாயுடு என சூடி மகிழ்வதாக பதிவு செய்து உள்ளார்.
மேலும் கடந்த 2020-இல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த #AvinashiRoadFlyover-ஐ, நமது #DravidianModel அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்து உள்ளது.
கோவையில் அவினாசி சாலையில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட புதிய மேம்பாலம் அக். 9-ம் தேதி திறப்பு; பருந்துப் பார்வையில் மேம்பாலம்: வீடியோ#Covaipic.twitter.com/0PckPOVz01
— Indian Express Tamil (@IeTamil) October 7, 2025
கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பால'த்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருப்பதாகவும்,கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி. நாயுடு அவர்களின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்வதாக தெரிவித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதிவு செய்து உள்ளார்.
செய்தி: பி. ரஹ்மான் - கோவை மாவட்டம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.