கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு எட்டிமடை அட்டமலை சரகத்தில் கடந்த சில நாட்களாக யானைக் கூட்டம் முகாமிட்டுள்ளது.
இந்த யானை கூட்டத்தில் பிறந்து சில நாட்களே ஆன ஒரு யானைக் குட்டி சோர்வாக காணப்படுவதாக வனத்துறையினர் கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து நடக்க முடியாமல் யானை படுத்திருந்த இடத்திற்கு வந்த மருத்துவர், பிறந்து 2 வாரங்களே ஆன யானைகுட்டி, முழுவளர்ச்சி இன்றி பிறந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் சோர்வாக இருந்த யானைக்கு குளுக்கோஸ் மற்றும் லேக்டோஜன் கலந்த நீரை கொடுத்துள்ளனர்.
ஆனால் உணவை எடுத்துக் கொள்ளாமல், யானைக் குட்டி இன்று காலை 9.30 மணியளவில் உயிரிழந்தது.
/indian-express-tamil/media/media_files/LoaxfZCibHCKmoXQTb82.jpeg)
/indian-express-tamil/media/media_files/ak8qf00utU190Nq2wWcN.jpeg)
/indian-express-tamil/media/media_files/eePI0MeMJbglHpZIQXmJ.jpeg)
பிறந்த சில தினங்களுக்கு பிறகு சிறுத்தை தாக்கியதில் குட்டி யானையின் உடலில் நகம் மற்றும் பற்காயங்கள் ஏற்பட்டு இறந்துள்ளதாக மருத்துவரின் முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குட்டி யானையை அப்பகுதியிலேயே வனத்துறையினர் குழி தோண்டி புதைத்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“