/indian-express-tamil/media/media_files/TSqudQn4jiqWOyloAhWj.jpg)
Coimbatore
கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், கரடிமடை பிரிவு மங்களபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் உள்ள விவசாய குட்டையில் சுமார் நான்கு வயது உடைய ஆண் யானை சிக்கியுள்ளது.
இதனை ரோந்து பணியின் போது அறிந்த வனத்துறை ஆல்ஃபா குழுவினர் உடனடியாக வனsசரக அலுவலருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த வன அலுவலர் தலைமையிலான குழுவினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் தண்ணீர் நிரம்பியிருந்த குட்டையை மட்டம் செய்து யானையை குட்டையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
Video: கோவை அருகே விவசாய குட்டையில் சிக்கிய குட்டி யானை ஜேசிபி உதவியுடன் மீட்பு#Coimbatorepic.twitter.com/S2fC0WEUiS
— Indian Express Tamil (@IeTamil) November 23, 2023
பின்னர் யானையை ஆசுவாசப்படுத்தி பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் அனுப்பினர்.
யானை விழுந்த குட்டை வனப்பகுதியில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ளது. வனப்பகுதியை ஒட்டியே குட்டைகள் தோண்டப்படுவதால் வனவிலங்குகள் அடிக்கடி இது போன்ற இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவும் வனத்துறையினர் விரைந்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.