கோவை மற்றும் பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது.
8 ரயில் பெட்டிகள் கொண்ட கோவை பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. முன்னதாக ரயிலுக்கு முன்பாக, ரயில்வே ஊழியர்கள் தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனர். காலை 5 மணிக்கு கோவையில் இருந்து ரயில் புறப்பட்டு சென்றது. இது காலை 11:30 மணி அளவில் பெங்களூர் சென்றடையும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/4tvyqla2JJEYbEFbHxdk.jpg)
/indian-express-tamil/media/media_files/rdYoqwmlIfBPMAqxC8dE.jpg)
/indian-express-tamil/media/media_files/a3g1j7XwTrO5z6ZPzthf.jpg)
பின்னர் மதியம் 1:40 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோவை வரும்.
இன்று சோதனை ஓட்டம் நடைபெற்ற பிறகு டிசம்பர் 30-ம் தேதி இந்த ரயில் சேவை துவக்கி வைக்கப்பட்டு, ஜனவரி 1 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
வந்தே பாரத ரயில் கோவை, சேலம், ஓமலூர், தர்மபுரி, ஓசூர், பெங்களூர், சென்றடைகிறது.
இந்த ரயிலில் முதல் வகுப்பில் 44 பேரும் இரண்டாம் வகுப்பில் 592 பேரும் மொத்தமாக 636 பேர் பயணிக்கலாம். முதல் வகுப்பு டிக்கெட் ரூ.2,350 இரண்டாம் வகுப்பு 1,300 ரூபாய் என கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“