Uday express train : கோவையில் இருந்து, 180 ரூபாய், திருப்பூரில் இருந்து, 165, ஈரோட்டில் இருந்து, 150, சேலத்தில் இருந்து, 130 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் பெங்களூரு செல்லலாம்.
ஹாய் பிரென்ட்ஸ், வாங்க இன்றைய நிகழ்ச்சிக்கு நேரடியா போயிருவோம்..
Advertisment
உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைத்துள்ள, ஏ.சி., அல்லாத எல்.எச்.பி., பெட்டியில், கோவை - பெங்களூருவுக்கு, 180 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என்பதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் விதமாக, முதல் ஏ.சி., அல்லாத ஐந்து எல்.எச்.பி., ரக (சேர்கார்) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில், கோவையில் இருந்து, 180 ரூபாய், திருப்பூரில் இருந்து, 165, ஈரோட்டில் இருந்து, 150, சேலத்தில் இருந்து, 130 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் பெங்களூரு செல்லலாம்.
அடிச்சது லக்..
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisements
கொரோனா ஈரானில் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ள 70,000 கைதிகளையும் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.கொரோனா வேகமாக பரவும் சூழலில், சிறைச்சாலைக்கும் பரவினால் உயிரிழப்பு அதிகமாகும் என்ற எண்ணத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி தெரிவித்தார்.
துன்பத்திலும் ஒரு இன்பம்...
மகளிர் சுய உதவி குழு மூலம், ஒரு லிட்டர் குடிநீர் ஒரு ரூபாய்க்கு விற்கும் திட்டத்தை, கோவை மாநகராட்சி துவக்கியுள்ளது. ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால், பாட்டிலில் ஒரு லிட்டர் தண்ணீர் பிடிக்கலாம்.200 ரூபாய் செலுத்தி, 'ரீசார்ஜ்' அட்டை பெற்றுக் கொண்டால், நாளொன்றுக்கு, 7 ரூபாய் செலுத்தி, 20 லிட்டர் கேன் நிரப்பிக் கொள்ளலாம். வீடு அல்லது கடைகளுக்கு நேரில் சென்று வினியோகிக்க, லிட்டருக்கு ஒரு ரூபாய் வீதம், 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் விளம்பரத்தை, மொபைல்போனில் ஒவ்வொரு அழைப்பின்போதும், 28 வினாடிகளுக்கு வழங்குவதால், சலிப்பு ஏற்படுவதாக, வருத்தம் எழுந்துள்ளது.
ஒரு நபர், ஒருவர், 50 கால் பேசினால், 50 முறையும், விளம்பரம் ஒலிபரப்பாகிறது. எதிர் முனையில் உள்ளவர்களுக்கு கேட்டால்கூட, புதியவர்கள் அறியும் வாய்ப்பு ஏற்படும். நாம் எத்தனை நபரை அழைக்கிறோமோ, அத்தனை முறையும், தலா, 28 வினாடிகள் நமக்கே ஒலிபரப்புவதால் எந்த பலனுமின்றி, நேர(டி) விரயம் மட்டுமே ஏற்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒரு நபரின் போனில் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இருமுறை மட்டும் நாம் அழைக்கும்போது கேட்கும் வகையிலும், நம்மை பிறர் அழைக்கும்போது ஒரு முறை மட்டும் கேட்கும் வகையில் மாற்றி அமைக்க, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye..
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil