ஹாய் பிரெண்ட்ஸ், கொரோனா வைரஸ் பீதி எல்லா இடங்களிலும் பரவியுள்ளது.பாதுகாப்பாக வீக் எண்டை என்ஜாய் பண்ணுங்க..
வாங்க, இப்போ நாம் நேரா நிகழ்ச்சிக்கு போவோம்..
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா வைரஸ் பொது மக்களை தாக்கி வரும் நிலையில், இதனை வைத்து மொபைல் போன், கம்ப்யூட்டர்களுக்கு போலி பி.டி.எப்., பைல்களை அனுப்பி, தகவல் திருடும் சம்பவங்களும் அரங்கேறி வரும், அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் எந்த விஷயத்தை அதிகளவு, இணையதளங்களில் தேடி பார்க்கின்றனர் என்பதை பொறுத்து, மோசடி நபர்கள் தங்கள் வேலையை காட்ட துவங்குவார்கள். தற்போது, கொரோனா வைரஸ் பீதி நிலவுவதால், அதனை வைத்து மோசடி செய்ய துவங்கியுள்ளனர். கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி, கொரோனா தடுப்பு முறைகள், கொரோனா மருந்து என, கொரோனா வைரஸ் பெயரில் பல பி.டி.எப்., பைல்களை இணையதளங்களில் வைத்துள்ளனர்.
இதனை வைத்து கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களில் உளவு பார்க்கவும், தகவல்களை திருடவும் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற பி.டி.எப்., பைல்களை முதலில் அனுப்புவார்கள். அதனை திறந்து பார்ப்பதால் அதில் ஒன்றும் இருக்காது. இத்தகைய போலி பைல்கள் மூலம் கம்ப்யூட்டர், மொபைல்போன்களில் ‘ மால்வேர்கள்’ ஊடுருவி விடும். இதனால், நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உக்காந்து யோசிக்கிறாங்க பாருங்க…
ஹாய் கைய்ஸ் : படிப்பில் சுட்டி இந்த பாட்டிமாக்கள்- விரைவில் கவுரவம்
ஹாய் கைய்ஸ் – பெண் வேடத்தில் எம்.ஜி.ஆரை பார்த்திருக்கீங்களா….: வைரலாகும் வீடியோ
பெண் கடன் நுகர்வோர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில், 11 சதவீத பங்களிப்புடன், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது, ‘டிரான்ஸ் யூனியன் சிபில்’ நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இது குறித்து, டிரான்ஸ் யூனியன் சிபில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்திய கடன் சந்தையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, 2019, செப்., மாத முடிவில், இந்தியாவில், மூன்று கோடி பெண்கள் பல்வேறு விதமான கடன்களை வாங்கி உள்ளதுதெரிய வந்துள்ளது. மொத்தமாக கடன் வாங்கியோரில், பெண்களின் பங்கு, 26 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பெண்கள் நாட்டின் கண்கள்
பரபரப்பான இந்த உலகில், தன்னை சுற்றி இருப்பவர்களையே மறந்து வாழும் மனிதர்களுக்கு மத்தியில், பறவைகளுக்கு என, தன் நேரத்தை ஒதுக்கி, அவற்றின் பசியை தீர்த்து வருகிறார், பறவைகள் ஆர்வலர். சென்னை, புழல் மத்திய சிறை எதிரே உள்ள, வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் மருத்துவர் டென்சில், 48; உளவியல் நிபுணர்.இவரது வீட்டின் அருகே எந்நேரம் சென்றாலும், கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்கும் பறவைகளை ரசிக்கலாம். இதற்கு காரணம், வீட்டில் அமைக்கப் பட்டு உள்ள மாடி தோட்டத்துடன் கூடிய பறவைகள் உணவகமாகும். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இவரை, ‘பறவை’ டென்சில் என்றும், அவரது வீட்டை, ‘கிளி வீடு’ என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.ஒரு கட்டத்தில், மாடி தோட்டத்தில் உருவான, தக்காளி, முள்ளங்கி, அவரை, மாதுளை, கொய்யா உள்ளிட்ட செடிகளை, வீட்டு தேவைக்கு பயன்படுத்தி வந்தார்.
பறவை நேசன்…
செம்பை பார்த்தசாரதி கோவிலில் 106வது ஏகாதசி உற்சாகத்தையொட்டி உள்ள சங்கீத உற்சவத்தில் கலைஞர்களின் சங்கீத ஆராதனையால் கிராமம் இசை மழையில் நனைந்தன. 7ம் தேதி நடக்கும் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் கோவில் உற்சவம் நிறைவு பெறுகின்றன.
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil