Advertisment

ஹாய் கைய்ஸ் : படிப்பில் சுட்டி இந்த பாட்டிமாக்கள்- விரைவில் கவுரவம்

President award for women : மார்ச் 8 ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் 'நரி சக்தி புராஸ்கர் 2019' விருதினை இருவரும் கூட்டாக பெற இருக்கின்றனர்.

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kerala, literacy, old women, president award, Ramnath kovind, chennai, rain water harvest, mylapore, voter id card, west bengal, PM Modi, jan dan yojana, bank accounts

kerala, literacy, old women, president award, Ramnath kovind, chennai, rain water harvest, mylapore, voter id card, west bengal, PM Modi, jan dan yojana, bank accounts

ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நேரடியாக நிகழ்ச்சிக்கு போயிருவோம்..

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கேரளாவில் படிப்பில் கலக்கிய இரு மூதாட்டிகள், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் விருது பெற உள்ளனர்.

கேரளாவை சேர்ந்த பாகீரதி அம்மாள் (வயது 105) என்ற மூதாட்டி, 10 வயதிலேயே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார். படிப்பின் மீதான ஆர்வத்தில் தற்போது படிப்பை தொடங்கிய அவர், 4ம் வகுப்பு தேர்வில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். இதன்மூலம் கேரள மாநில எழுத்தறிவு மிஷனின் வகுப்புகளில் அதிக வயதில் தேர்ச்சி பெற்றவர் என்னும் சிறப்பை பெற்றார். கடந்த பிப்.,23ம் தேதி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாகீரதியின் படிப்பு ஆர்வத்தை பாராட்டி, அனைவருக்கும் முன்மாதிரியான அவருக்கு மரியாதை செலுத்துகிறேன், என்றார்.

அதேபோல் கேரளாவை சேர்ந்த கார்த்தியானி அம்மாள் (வயது 96) என்ற மூதாட்டி 2018ம் ஆண்டில் தேர்வெழுதிய போது நூற்றுக்கு 98 மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியப்படுத்தினர். இந்த இரு மூதாட்டிகளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் விருது பெற இருக்கின்றனர். மார்ச் 8 ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் 'நரி சக்தி புராஸ்கர் 2019' விருதினை இருவரும் கூட்டாக பெற இருக்கின்றனர்.

வாழ்த்துக்கள் பாட்டிம்மாஸ்..

ஹாய் கைய்ஸ் - பெண் வேடத்தில் எம்.ஜி.ஆரை பார்த்திருக்கீங்களா....: வைரலாகும் வீடியோ

ஹாய் கைய்ஸ் : 3 மதங்களுக்கும் சேர்த்து ஒரே கோயில் - வெல்டன் ராகவா லாரன்ஸ்

சென்னை, மயிலாப்பூரில், முதல்முறையாக, ஜெர்மன் தொழில்நுட்பத்தில், மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை, மாநகராட்சி சோதனை முயற்சியாக செய்து வருகிறது. வழக்கமான வடிகால் பணியின் போது, பள்ளம் தோண்டி, கம்பி கட்டுதல், கான்கிரீட் போடுதல், தண்ணீர் ஊற்றி திடப்படுத்துதல் என, 100 அடி நீளத்திற்கு வடிகால் அமைக்க வேண்டுமானால் கூட, 10 நாட்களுக்கு குறையாமல் ஆகும். ஜெர்மன் தொழில்நுட்பத்தில், ஒரே நாளில் கூட, 100 அடி அகலத்திற்கு வடிகால் எளிதாக அமைக்கலாம். சென்னையின் பிரதான பிரச்னையான, வடிகாலில் கழிவு நீர் கலப்பதும், கொசு உற்பத்தியாவதும் தடுக்கப்படும்.

வரவேற்கத்தக்க முயற்சி

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த சுனில் கர்மாகர் என்பவருக்கு நாய் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுனில் கர்மாகர் கூறியதாவது: என்னை அழைத்த அதிகாரிகள், திருத்தம் செய்த வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்தனர். அதில், எனது புகைப்படத்திற்கு பதில் நாய் புகைப்படம் இருந்தது. அட்டையில், அதிகாரியும் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், அவரும் அதனை பார்க்கவில்லை. அதிகாரிகள் எனது கவுரவத்துடன் விளையாடுகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஓ மை கடவுளே..

இந்தியாவில், பிரதமரின், 'ஜன் தன் யோஜனா' திட்டத்தால், வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களின் எண்ணிக்கை, 77 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த, 2014ல், 43 சதவீத பெண்கள் மட்டுமே, வங்கிகளில் கணக்குகள் வைத்து இருந்த நிலை மாறி, 2017ல், அது, 77 சதவீதமாக உயர்ந்துள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில், 36 சதவீத பெண்களும், பாக்.,கில், 7 சதவீத பெண்களுமே வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளனர். அவற்றில், பலரின் கணக்குகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Narendra Modi Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment