ஹாய் கைய்ஸ் – பெண் வேடத்தில் எம்.ஜி.ஆரை பார்த்திருக்கீங்களா….: வைரலாகும் வீடியோ

Viral video of MGR : எம்ஜிஆர்., பெண் வேடமிட்டு நடித்த அபூர்வ காட்சி என இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது..

By: Updated: March 4, 2020, 01:07:23 PM

ஹாய் பிரெண்ட்ஸ், ஹோலி கொண்டாட்டத்திற்கு ரெடி ஆயிட்டீங்களா?… வாங்க அதே உற்சாகத்தோட இன்றைய நிகழ்ச்சிக்கு போயிருவோம்..

எம்ஜிஆர், மேலை நாட்டு நவநாகரீக நங்கையாக குட்டைப் பாவாடை சகிதமாக நடிகர் அசோகனிடம் இருந்து ஜெயலலிதாவை மீட்பது போன்ற ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடித்திருக்கின்றார் என்றால் அது தேவர் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட “காதல் வாகனம்” என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் தான். இது எம் ஜி ஆரின் திரைப்படங்களில் அரிதான ஒரு காட்சியாக பார்க்கக் கூடிய ஒன்று. மேலும் எம்ஜிஆருக்காக பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பின்னணி பாடிய ஒரே ஒரு பாடலும் இந்தப் பாடலாகத்தான் இருக்கும். “என்ன மேன் பொண்ணு நான் சும்மா சும்மா பார்க்காதே” என்று ஆரம்பமாகும் இப்பாடல். எம்ஜிஆரின் ஆஸ்தான ஆடை வடிவமைப்பாளரான எம்.ஏ.முத்துதான் இப்பாடல் காட்சிக்காகவும் ஆடை வடிவமைத்துக் கொடுத்தவர். எம்ஜிஆர்., பெண் வேடமிட்டு நடித்த அபூர்வ காட்சி என இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது..

இந்த வைரல் தொல்லை தாங்கலப்பா..

உடுமலை அருகே ஆக்கிரமிப்பு மற்றும் மணல் திருட்டு காரணமாக, திசை மாறி நல்லாறு காணாமல் போய் வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பருவமழைக்காலங்களில், ஆற்றில் செல்லும், தண்ணீர் பல மாதங்களுக்கு தேங்கி, சுற்றுப் பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாத்து வந்தது. ராவணாபுரம், நல்லார் காலனி, ஆண்டியூர், தேவனூர்புதுார் உள்ளிட்ட பகுதிகளின், விவசாயத்திற்கு ஆதாரமாக இருந்த நல்லாறு தற்போது ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய் வருகிறது.இந்த ஆற்றின் பல இடங்களில், கரைகள் தகர்க்கப்பட்டு, சமவெளியாக்கப்பட்டு, விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

எங்கு போய் முடியுமோ…

ஊதிய உயர்வு உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 11, 12 மற்றும், 13ம் தேதிகளில், நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற இருந்தது. வரும், 10ம் தேதி, ஹோலி பண்டிகை விடுமுறை என்பதால், அதைத் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. வரும், 14, 15ம் தேதிகள், அரசு விடுமுறை என்பதால், வங்கிகள் தொடர்ந்து இயங்காது என்ற, நிலை ஏற்பட்டது. ஆனால், இரு தரப்பு பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வேலைநிறுத்தம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால், வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் மாநிலங்களில் மட்டும், வரும், 10ல், வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்கிறோம்.

ஹாய் கைய்ஸ் : 3 மதங்களுக்கும் சேர்த்து ஒரே கோயில் – வெல்டன் ராகவா லாரன்ஸ்

ஹாய் கைய்ஸ் : இந்திய இதிகாசங்களை ஏற்க மறுக்கும் மக்கள் – ஜெயமோகன் குற்றச்சாட்டு

டில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45 வயதுடைய நபருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இருவரும் டில்லி அருகில் நொய்டாவில் உள்ள தனியார் பள்ளியில் பயில்கின்றனர். இவர்கள் கடந்த பிப்.,28ம் தேதி ஆக்ராவில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். அதே விழாவில் பள்ளியில் படித்து வரும் 5 பேரின் குடும்பங்களும் பங்கேற்றதாக தெரியவந்தது. அவர்களில் 6 பேருக்கு காய்ச்சல் இருப்பதால் அவர்களுடைய ரத்த மாதிரிகளை புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளனர். இதனையடுத்து மாணவர்களுக்கும் கொரோனா தாக்கம் இருந்துவிடக்கூடாது என்பதற்காக பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் சுகாதார அதிகாரிகளால் பள்ளி வளாகம் சுத்தப்படுத்தப்பட்டது. விடுமுறை விடப்பட்டதால் உயர்நிலை மாணவர்களுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

எச்சரிக்கை நடவடிக்கை

ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Mg ramachandran female character viral video bank strike

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X