scorecardresearch

ஹாய் கைய்ஸ் : 3 மதங்களுக்கும் சேர்த்து ஒரே கோயில் – வெல்டன் ராகவா லாரன்ஸ்

நெருப்புக்கும், பசிக்கும் ஜாதி, மதம் கிடையாது. அந்த வகையில், அனைவரும் வந்து சமமாக உணவருந்த, இந்த ஆலயத்தில் அன்னதான கூடமும் அமைக்கப்படும்

ஹாய் கைய்ஸ் : 3 மதங்களுக்கும் சேர்த்து ஒரே கோயில் – வெல்டன் ராகவா லாரன்ஸ்
raghava lawrence, temple, hindu, muslim, christian, whatsapp, technology, recover, tanjore, rajasthan, chennai corporation, women, scooter subsidy

ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நேரடியா நிகழ்ச்சிக்கு போவோம்..

மூன்று மதங்களுக்கும் சேர்த்து, ஒரே கோவில் கட்டப் போவதாக, நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். இது குறித்து, ராகவா லாரன்ஸ் கூறியதாவது:மத வேறுபாடுகளை கடந்து, ‘மனிதம் தான் பெரிது’ என்பதை உணர்த்தும் வகையில், மூன்று மதங்களுக்கும் சேர்த்து, ஒரே கோவில் கட்ட உள்ளேன். மூன்று மதத்தினரையும் பிரிக்க முடியாத வகையில், அவர்கள் ஒன்றாக வந்து வழிபடும் வகையில், கோவில் இருக்கும். நெருப்புக்கும், பசிக்கும் ஜாதி, மதம் கிடையாது. அந்த வகையில், அனைவரும் வந்து சமமாக உணவருந்த, இந்த ஆலயத்தில் அன்னதான கூடமும் அமைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

வாழ்த்துக்கள் லாரன்ஸ்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தஞ்சைக்கு ரயிலில் வழிதவறி வந்து, ஐந்து நாட்கள் சுற்றித் திரிந்த, பரமக்குடியைச் சேர்ந்த, 80 வயது முதியவர் நாகரத்தினம் ‘வாட்ஸ் ஆப்’ தகவலால், மீண்டும் மகனிடம் சேர்க்கப்பட்ட நிகழ்வு நடந்தேறியுள்ளது. தஞ்சை மருத்துவ கல்லுாரி சாலையில் நாகரத்தினம் மயங்கி கிடந்தார். அவ்வழியே வந்த வல்லம் ரியாசுதீன், 38, என்பவர் மீட்டு விசாரித்ததில், முதியவர் பரமக்குடியைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரிந்தது. மற்ற விபரங்களை அவரால் சொல்ல தெரியவில்லை.ரியாசுதீன், பரமக்குடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்து, சாத்தனுாரைச் சேர்ந்த இருவரின் மொபைல் எண்களை பெற்று, ‘வாட்ஸ் ஆப்’புக்கு முதியவர் படத்தை அனுப்பி உள்ளார்.அவர்கள், பரமக்குடி, சாத்தனுார் பகுதியில் உள்ள, ‘வாட்ஸ் ஆப்’ குரூப்களுக்கு முதியவர் படத்தை பகிர்ந்துள்ளனர். இதை நாகரத்தினத்தின் இளையமகன் ராஜாராமன் பார்த்து, ரியாசுதீனை தொடர்பு கொண்டார். நேற்று அதிகாலை, ராஜாராமன் தஞ்சை வந்து, ரியாசுதீன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, தந்தையை அழைத்து சென்றார்.

வளரட்டும் தொழில்நுட்பம்.

ராஜஸ்தானைச் சேர்ந்த, பக்வானி தேவி என்ற மூதாட்டி, ஆங்கிலத்தில் அசத்தலாக பேசும், ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை, ஐ.பி.எஸ்., அதிகாரி அருண் போத்ரா, ‘டுவிட்டரில்’ பதிவேற்றி, ‘மூதாட்டிக்கு, 10க்கு எத்தனை மதிப்பெண் கொடுக்கலாம்’ எனக் கேட்டிருந்தார். பலர் மூதாட்டியை வெகுவாக பாராட்டி, தாராளமாக மதிப்பெண்கள் வழங்கியுள்ளனர். ஒரு சிலர், ‘ஆங்கிலப் புலமைக்கு பெயர் பெற்ற காங்., – எம்.பி., சசிதரூருக்கு சரியான சவால்’ என, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியான ஒரே நாளில், மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்; 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

ஹேட்ஸ் ஆப் பேபி…

ஹாய் கைய்ஸ் : இந்திய இதிகாசங்களை ஏற்க மறுக்கும் மக்கள் – ஜெயமோகன் குற்றச்சாட்டு

ஹாய் கைய்ஸ் : காய்ந்த இலைகளுக்காக ஒரு தொட்டி – அசத்தும் சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில், ‘அம்மா’ இருசக்கர வாகனத்திற்கான மானியம் பெற, பெண்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது. இதனால், இரண்டு ஆண்டுகளாக, இலக்கை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 2019 – 20 நிதியாண்டில், 4,320 பேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் மானியம் பெற, 120 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.

ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Raghava lawrencewhatsapp technologychennai corporation scooter subsidy