Advertisment

நியாயமான ஊதியம் வழங்க வேண்டி கோரிக்கை அட்டை அணிந்த படி பணிபுரியும் அரசு ஊழியர்

செல்வம் தாழ்தப்பட்ட பழங்குடி இன பல்கலைக்கழக சங்கத்தின் செயலாளராக உள்ளார்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

கோவை மருதமலை சாலை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் செல்வம்.  30 வருடங்கள் மேலாக நிரந்தர பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் கடந்த 22 வருடங்களாக முறையாக வழங்கப்பட வில்லை.

Advertisment

இதனால் இவருக்கு மாதம் ரூ. 40.334/- இழப்பீடு ஆவதாக கூறியுள்ளார் . செல்வம் தாழ்தப்பட்ட பழங்குடி இன பல்கலைக்கழக சங்கத்தின் செயலாளராக உள்ளார்.

publive-image
செல்வம்

இதுகுறித்து செல்வம் கூறுகையில், ஆட்சி மன்ற குழு ,உண்மை தண்மை கண்டறியும் குழு , துணைவேந்தர் பொறுப்பு குழு உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட குழுக்கள் ஒப்புதல் வழங்கியும் இவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தமைக்கு கடந்த 23 ஆண்டுகளாக என்னை நிர்வாகம் பழி வாங்கி வருகிறது.

எனவே தனக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான ஊயத்திதை வழங்கும் வரை,  கடந்த 25 ஆம் தேதி பல்கலைக்கழக நிர்வாகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மனு கொடுத்து உள்ளார்.‌

அதில் இன்று முதல் வரும் 14 ஆம் தேதி வரை கழுத்தில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய உள்ளதாகவும் தொடர்ந்து 14 ஆம் தேதி அன்று சமத்துவ தினத்தில் உண்ணாவிரதம் இருப்பதாகவும் கூறி மனு அளித்து உள்ளார்.

அதன் அடிப்படையில் இன்று கோரிக்கை அட்டை அணிந்து அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால்  பல்கலைக்கழக ஊழியர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment