தங்களை தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரி பைக் டாக்ஸி அசோசியேஷன் அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் "ரேபிட்டோ செயலி" மூலம் பைக் டாக்ஸி ஓட்டி வரும் நபர்களை ரயில் நிலையம், காந்திபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், ஆட்டோ ஓட்டுனர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரியும் பைக் டாக்ஸி அசோசியேஷன் அமைப்பை சேர்ந்த நபர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய பைக் டாக்ஸி அசோசியேசன் உறுப்பினர் பேசுகையில்
பைக் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களின் அச்சுறுதல்களை எதிர்கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் செயலி மூலம் பைக் டாக்ஸியை புக் செய்கின்றனர். அவர்களை அழைக்க வரும்போது ஆட்டோ ஸ்டாண்ட் அருகே இருந்தால் சிறிது தூரம் தள்ளி வருமாறு அறிவுறுத்துகிறோம். அப்போது வரும் வாடிக்கையாளர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் மிரட்டுகிறார்கள்.
வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்லும் போது எங்களது வாகனங்களை வழிமறைத்து ஒருமையில் பேசி மிரட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். என்றார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“