Advertisment

வீடு புகுந்து பைக் திருடிய திருடர்கள்: சிசிடிவி காட்சி வைரல்

கோவையில், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பல்சர் மோட்டார் சைக்கிளை இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன.

author-image
WebDesk
New Update
Coimbatore bike theft video goes viral

கோயம்புத்தூரில் வீடு பகுந்து பைக் திருடிய திருடர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை சரவணம்பட்டி அடுத்துள்ள சின்ன மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. 55 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகன் அரவிந்த் 31 இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் இவரின் வீட்டிற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் காம்பவுண்ட் கேட்டை திறந்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் இருவர் சுற்றிலும் நோட்டமிட்டு விட்டு அங்கிருந்த பல்சர் பைக்கை திருடி சென்றனர்.

இது குறித்து அரவிந்த் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, இந்தத் துணிகர கொள்ளைச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment