கோவை பேரூரில் இருந்து வேடப்பட்டி செல்லும் சாலையில் சிமெண்ட் கடை நடத்தி வருபவர் கணேஷ்குமார். இவர் மனைவி மைதிலி. இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் சிமெண்ட் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.
கணேஷ் குமார் மேலும் சென்னையில் மற்றொரு சிமெண்ட் நிறுவனமும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வேடப்பட்டி செல்லும் சாலையில் உள்ள கடையில் இருந்து தூசிகள் வெளியேறி அருகே உள்ள கடைகளுக்கும் மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கும் செல்லுவதாக கூறி கடந்த சில மாதங்களாக அப்பகுதியைச் சேர்ந்த வேடப்பட்டி பா.ஜ.க மண்டல தலைவர் கார்த்திகேயன் என்பவர் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி கடையில் உரிமையிளார் மைதிலி மற்றும் பெண் ஊழியர்களுடன் பணியில் இருந்த போது அங்கு வந்த 7 க்கும் மேற்பட்டோர் கடையின் ஷட்டரை அடைத்து, அங்கு இருந்த ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.
இதுகுறித்து கணேஷ்குமாரின் மனைவி மைதிலி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கார்த்திகேயன், ரம்யா, சுசிலா, பிரபு, சுரேஷ், சூரியா, பாலா மற்றும் அடையளாம் தெரிந்த சில நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த சி.சி.டிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“