தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
Advertisment
இந்நிலையில் காந்திபுரம் ராம் நகர் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு ஒருவர் கேரளா லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது
இதனையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சபரி என்பதும் கோவை பா.ஜ.க இளைஞரணி துணை தலைவர் என்பது தெரியவந்தது.
Advertisment
Advertisements
இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
செய்தி: பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“