Advertisment

கோவையைச் சேர்ந்த ரத்த புற்றுநோயாளிக்கு சென்னையில் கொரோனா

coimbatore covid-19 case: சென்னை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ரத்த புற்று நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coimbatore blood cancer patient tested positive for coronavirus in chennai medical college

Coimbatore Kavundampalayam man tested positive for coronavirus :  சென்னை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ரத்த புற்று நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

கோயம்புத்தூர்  கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த அந்த 44 வயது நபர், சமிப காலமாக  கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், சென்னையில் சிகிச்சையைத்  தொடர நினைத்ததால், மனைவியின் உதவியால் இ- பாஸ் மூலம், சென்னை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் கொரோனா  தொடர்பான அறிகுறிகளை காட்ட தொடங்கியதால், உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சையின் போது கொரோனா தொடர்பான அறிகுறிகள் இவரிடம் தென்படவில்லை என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்ன்றன.

ஒரு காலத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சி கொரோனா பெருந்தொற்றில்  பலத்த ஆபத்தை சந்திக்கும் என்ற கணிக்கப்பட்ட  நிலையில், கடந்த ஒரு வாரமாக அங்கு  கொரோனா தொற்று பரவல் கண்டறியப்படவில்லை. தற்போது, அந்த மாநகராட்சியில் ஏழு பேர் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கவுண்டம்பாளையத்தில் உள்ள அவரின் இரண்டு குழந்தைகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  மேலும், கோயம்புத்தூர்  மருத்துவக் கல்லூரியில் தொடர்பில் இருந்தாக அறியப்படும் மூன்று நோயாளிகள் மருத்துவர்கள் மற்றும் செவிலியளர்களை மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment