Advertisment

கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிக்கு 1 மாத பரோல் - பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி, கோவை சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore bomb blast accused Basha wants Parole

Coimbatore bomb blast accused Basha wants Parole

Coimbatore bomb blast accused Basha wants Parole  : கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள அல் - உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது இதில் பல அப்பாவி பொதுமக்கள் உயிர் இழந்தனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

29ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் பாஷா உட்பட பலருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கடந்த 2007- ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டனை பெற்று 22 ஆண்டுகளாக சிறையில் உள்ளஎஸ்.ஏ.பாஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி அவரது மகள் முபீனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் சிறையில் உதவியாளர் இல்லாமல் எந்த பணிகளையும் செய்ய முடியாத நிலையில் உள்ள தன் தந்தையை கவனித்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்கவும், குடும்ப விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கவும், தன் தந்தைக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம். சத்தியநாரயணன், எம். நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி, கோவை சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க : மகள் கல்யாணத்திற்காக பரோல் கேட்கும் நளினி

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment