Advertisment

280க்கும் மேற்பட்ட அரங்குகள், பல்வேறு நிகழ்ச்சிகள்: ஜூலை 19-இல் கோவை புத்தகத் திருவிழா தொடக்கம்

இந்த புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு புதுச்சேரி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். 280க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore

Coimbatore

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா நிர்வாகம் இணைந்து 8வது  ஆண்டாக நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா ஜூலை 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.

Advertisment

இந்த புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு புதுச்சேரி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். 280க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த புத்தக கண்காட்சி குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர்கிராந்திகுமார் பாடி, ’ஆண்டுதோறும் இந்த புத்தக திருவிழா வெற்றிகரமாக நடந்து  வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகள், விருதுகள், போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. மாவட்ட நூலக துறை மற்றும் கொடிசியா நிர்வாகம் இணைந்து புத்தக திருவிழாவை நடத்த உள்ளனர்.

கடந்த ஆண்டு 2 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றது. அதே போன்று இந்த ஆண்டும் எதிர்பார்க்கிறோம் கடந்த முறை Book Donation மூலம் 2000 புத்தகங்கள் சிறைவாசிகளுக்காக அளிக்கப்பட்டது. அதே போன்று இந்த ஆண்டும் Donation Drive நடத்த உள்ளோம்.

பள்ளி மாணவர்களை அந்தந்த பள்ளிகளில் இருந்து அழைத்து வரவும் ஏற்பாடுகள் செய்கிறோம். 285 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது, பல்வேறு மாநிலங்களில் இருந்து பதிப்பாளர்கள் வருகை புரிய உள்ளனர்.

இந்த புத்தகத் திருவிழாவில் அனைத்து வயதினர்களுக்கான புத்தகங்களும் இடம்பெற உள்ள. மேலும் இம்முறை மாணவர்களுக்கு பல்வேறு இலக்கிய போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது.

19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை எந்த நாட்களிலும் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து இந்த புத்தகத் திருவிழா நடைபெறும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் இதில் பயனடையுமாறு ஆட்சியர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டார்.

இந்த புத்தக திருவிழாவிற்கு அனுமதி இலவசம் ஆகும்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment