சீமானை தழுவிக்கொண்ட அண்ணாமலை: அன்புமணி கொடுத்த ரியாக்ஷன்; கோவை நிகழ்ச்சியில் சுவாரஸ்யம்!

பொதுமேடைகளில் அண்ணாமலை சீமான் மீதும், சீமான் அண்ணாமலை மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Seeman Annda

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவரும் அரசியலில் எதிர் எதிர் துருவங்களால் இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் கைக்குலுக்கி கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்ற கூற்றை போல், பொதுமேடைகளில் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொள்வதும் தனிப்பட்ட முறையில் நட்பு பரிமாறிக்கொள்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான்.

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லிக்கொண்டு அரசியல் பயணத்தை தொடங்கிய சீமான், தற்போது மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். அதேபோல், திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லிக்கொண்டு அரசியல் செய்து வரும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல் பொதுமேடைகளில் அண்ணாமலை சீமான் மீதும், சீமான் அண்ணாமலை மீதும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இதனிடையே சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமாக வாக்குகளை பெற்று பல தொகுதிகளில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி 3-வது மற்றும் .4-வது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி மாநில அந்தஸ்து பெற்றதை பாராட்டி பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது ஒரு பொது நிகழ்ச்சியில், சீமானை ஆர கட்டி தழுவி கைகுலுக்கி அன்பை பரிமாறிக்கொண்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

கோவையில் ஜெம் மருத்துவமனை மருத்துவர் பழனிவேல் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தக வெளியீட்டு விழா, கோவை லீ மெரிடீயன் ஹோட்டலில் நடைபெற்றது. இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜக. தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சீமானை நோக்கி வந்த அண்ணாமலை அவருடன் கை குலுக்கி கட்டித்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டார்.

இவர்கள் கட்டிப்பிடிப்பதை அருகில் அமர்ந்திருந்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்த்தக்கொண்டிருந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Ntk BJP Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: