/tamil-ie/media/media_files/uploads/2023/01/Coimbatore-7.jpg)
Coimbatore bus accident
பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம், உக்கடம், கோவை புதூர் வழியாக இயங்கும் தனியார் பேருந்து ஒன்றும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் மற்றொரு தனியார் பேருந்து தொழில் போட்டி காரணமாக ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு அதிவேகத்துடன் சென்றுள்ளது என கூறப்படுகின்றது.
இந்நிலையில் அந்த இரண்டு பேருந்தும் பீளமேடு பகுதியில் சென்றபோது நடு ரோட்டில் உரசி கொண்டு மோதிய சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அங்கு வந்த போக்குவரத்து பெண் காவலர் அந்த இரண்டு பேருந்துகளின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தினார். பேருந்துகள் மோதிக் கொண்டு நிற்கும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுமக்களுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வகையிலும் சாலையில் செல்லும் போது மக்களை அச்சுறுத்தும் வகையில் பேருந்துகளை இயக்கும் இதுபோன்ற தனியார் பேருந்துகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மேலும் அந்த ஓட்டுநர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் பொதுமக்களின் உயிரை பாதுகாக்க முடியும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தகவல் கோரிக்கை வைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.