கோவை கார் விபத்து : கோவை மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது, அதிவேகமாக வந்த சொகுசு ஆடி கார் மோதியதில் 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
Advertisment
coimbatore audi car accident, கோவை ஆடி கார் விபத்து
கோவை சுந்தராபுரம் பெரியார் சிலை பகுதி அருகே, பேருந்துக்காக சாலையோரம் பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது, பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி, அதிவேகமாக வந்த ஆடி சொகுசு கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றிருந்த மக்கள் மீது மோதியது. இதன் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கோவை கார் விபத்து சிசிடிவி கேமரா ஃபுட்டேஜ்
Advertisment
Advertisements
சாலையோர பூக்கடை மற்றும் ஆட்டோவின் மீதும் கார் மோதியதில், மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல்துறை துணை ஆணையர் லட்சுமி உடனடியாக விரைந்து, விசாரணை மேற்கொண்டார்.
அப்போது சொகுசு காரை ஓட்டி வந்த ஜெகதீசனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.