scorecardresearch

கோவை காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம்.. 5 பேர் கைது

காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் காரில் இருந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.

Coimbatore car blast
Coimbatore car blast

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி அன்று காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் காரில் இருந்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் (29) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகரம் பி 4 உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27) மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore car blast 5 arrested