/indian-express-tamil/media/media_files/VrpNQBXCf92sM5cAIMkT.jpg)
கோவை கார் வெடிப்பு வழக்கில் தமிழகம் முழுதும் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
Coimbatore| Bomb Blast: கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்,
இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களையும் சந்தேகப்படுபவர்களையும் அழைத்து வந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை உக்கடம் பகுதியில் உள்ள அல் அமீன் காலனியை சேர்ந்த ஏசி மெக்கானிக் ரகுமான் என்பவர் இல்லத்தில் இன்று அதிகாலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அத்துடன் மொத்தம் 12 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கார் வெடிப்பு விபத்து சம்பவம் தொடர்பாக அரபிக் கல்லூரிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் இன்றும் சோதனைகள் நடைபெற்று வருகிறது.
இதேபோல், நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ள பக்ருதீன் (35) என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.