Advertisment

கைதானவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யாதது ஏன்? கோவை சம்பவம் குறித்து அண்ணாமலை கேள்வி

கோவை மாருதி கார் வெடித்து சிதறிய வழக்கில்,தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore explosion, terror angle, Car explosion, LPG cylinder explosion, கோவை கார் வெடி விபத்து, கோவை கார் கேஸ் லிண்டர் வெடி விபத்து, கோவை கார் விபத்து, IE Tamil, Tamil indian express news today, chennai news

தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை

கோவையில் மாருதி கார் வெடித்து சிதறிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏன் தேச துரோக வழக்கு பதிவு செய்யவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

கோவையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியதில், ஜமேசா முபின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் கோவை மட்டுமல்லாமல் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கோவை மாருதி கார் வெடித்து சிதறிய வழக்கில்,தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை கைது செய்த உக்கடம் போலீசார் அவர்களிடம்தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் மீது உபா சட்டத்தின் கீ்ழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த சம்பவம் நடந்த நாளில் இருந்து தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏன் தேச துரோக வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில்,

கோவை மாநகரம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. பயங்கரவாத வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய புலனாய்வு துணையினரால் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன் மற்றும் கேரளாவை சேர்ந்த அபுபக்கர் ஆகியோர் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஜக்ரன் ஹசீமுடன் தொடர்புடையர்கள். அவர்கள் இப்போது சிறையில் இருந்தாலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் தற்போது இறந்துள்ள ஜமேசா முபினும் ஒருவர்.

இவர்கள் தான் கோவையில் வெடித்த மாருதி காரை ஓட்டி வந்துள்ளார். ஆனால் இதை தீவிரவாத செயல் என்று கூற காவல்துறை மறுத்து வருகிறது. அவரது வீ்ட்டின் அருகில் உள்ள சி.சி.டி.வி. காட்சியில் முபின் சில நண்பர்ளுடன் சேர்ந்து 2 சிலிண்டர்களை தனது காருக்குள் ஏற்றப்படும் காட்சி பதிவாகியுள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர்

ஆனால் அவர்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியிடவில்லை. இது தற்கொலைப்படை தாக்குதல் என்றும் போலீசார் குறிப்பிடவில்லை. டி.ஜி.பி.யும் காவல்துறையினரும் தரும் பேட்டி குழந்தைத்தனமாக உள்ளது. கோட்டை மேடு பகுதியில் இருந்து கார் கிளம்பியது முதல் வெடித்தது வரை சி.சி.டி.வி.காட்சிகள் உள்ளது. இன்னும் ஒருவர் இறந்தால் தான் முதல்வது உள்துறை அமைச்சகம் தோற்றுவிட்டது என்பதை ஒப்புக்கொள்வார்களா?

கடந்த தி.மு.க சிறந்த உளவு அதிகாரிகள் இருந்தனர். அதேபோல் அதிமக ஆட்சியிலும் இருந்தனர். ஆனால் தற்போது உளவுத்துறையில் சிறந்த அதிகரிகள் இல்லை. முதல்வர் தமிழக உளவுத்துறையில் சிறந்த உளவு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். கொங்கு மண்டலாமாக கோவை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் தற்போது கலவர பூமியாக மாறி வருகிறது.

தமிழக அரசு இந்த தாக்குதலை தற்கொலைப்படை தாக்குதல் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.இந்த விவகாரத்தில் உண்மையை வெளியில் கொண்டுவரவேண்டியது பா.ஜகவின் கடமை. தமிழகத்திர் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்கிறார்களா என்ற கேள்விக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும். அதேபோல் இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என்று தமிழக அரசு ஒப்புக்கொண்டால் என்.ஐ.ஏ கோவைக்கு வரவேண்டும் என கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment