கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவகளின் வீடுகளில் என்.ஐ.ஏ மற்றும் மாநகர தனிப்படை போலீசார் தனித்தனியே சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை, உக்கடம் கோட்டை அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில் முன்பாக கார் வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பாக உக்கடம் வின்செண்ட் சாலையிலுள்ள குடிசை மாற்று வாரிய அடிக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மற்றும் மாநகர தனிப்படை போலீசார் தனித்தனியே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்குள்ள சுமார் 362 வீடுகளில் வசிப்பவர்கள் குறித்த விபரங்களை வருவாய்த்துறை அலுவலகளுடன் இணைந்து தனிப்படை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
தேசிய புலணாய்வு முகமை அதிகாரிகள் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்சர்கான் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனின் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“