Coimbatore: கோவையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வப்போது கைது செய்யப்பட்டவர்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்து சம்பந்தப்பட்ட இடங்களில் விசாரணை மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட இர்ஷாத். முகமது உசேன். ஜமீல் பாட்ஷா உமரி, சையது அப்துல் மற்றும் ரகுமான் உமரி ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கோவையில் இஸ்லாமிக் தொழில்நுட்ப நிறுவனம், குனியமுத்தூர் அரபிக் கல்லூரி, கரும்புக்கடை ஆசாத் நகர் ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை என்.ஐ.ஏ அதிகாரி விக்னேஷ் தலைமையிலான குழுவினர் நடத்தி உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“