கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த மாருதி காரில் திடீரென கேஸ் கசிவின் காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-23-at-10.32.12.jpeg)
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் மரணம்
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-23-at-10.32.12-1.jpeg)
சம்பவ இடத்தை ஏ.டி.ஜி.பி தாமரை கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று காலை நான்கு மணி முதல் 4.30 மணிக்குள் மாருதி 800 காரில் இருந்த சிலிண்டர் வெடித்துள்ளது. இதில் காரை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் யார் என்று தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-23-at-13.11.45.jpeg)
கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு உள்ள சாலையில் இந்த சம்பவமான நடைபெற்றிருக்கிறது. அதனால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம். தடய அறிவியல் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் சம்பவத்தில் உள்ள தடயங்களை சேகரித்து வருகின்றனர். சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றோம். காரின் உள்ளே ஒரு சிலிண்டர் இருந்துள்ளது. கார் முழுவதும் சேதமடைந்துள்ளது, என்று கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-23-at-10.32.11-1-1.jpeg)
இந்தநிலையில், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் தீ பற்றிய விவகாரத்தில், அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-23-at-10.32.10.jpeg)
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, இச்சம்பவம் குறித்து காவல்துறையினர், திட்டமிடப்பட்ட சதியா அல்லது விபத்தா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதுவரை பொதுமக்கள், அனைத்து மதத்தை சேர்ந்தவர்கள், அனைத்து இயக்கங்களை சார்ந்தவர்கள் அமைதியான முறையில் போலிசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல், தீபாவளியை நல்லமுறையில் கொண்டாட அமைதியாக இருக்க வேண்டுமென பா.ஜ.க வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/WhatsApp-Image-2022-10-23-at-13.11.44-1.jpeg)
மேலும் பா.ஜ.க மாநில தலைவர் அறிவுறித்தலின்படி கோவையில் எந்த இடத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் போலிசாருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதால் பா.ஜ.க.,வினரால் எவ்வித இடையூறும் இருக்காதெனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil