கோவை, உக்கடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கார் வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் உக்கடம் ஜி.எம். நகரைச் சோ்ந்த ஜமேஷா முபீன் (25) என்ற இளைஞா் உயிரிழந்தார்.
Advertisment
இந்த வழக்கில் ஜமேசா முபின் உடன் தொடா்பில் இருந்த உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை யுஏபிஏ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கைதான 5 பேரையும் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த போலீசார்
மேலும், ஜமேஷா முபீனின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 75 கிலோ அளவிலான பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல், அலுமினியம் உள்ளிட்ட வெடிபொருள் மூலப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
Advertisment
Advertisements
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஐவரையும் காவல் காவலில் எடுத்து விசாரிக்கமாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 3 நாட்கள் அவகாசம் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே, கார் வெடிப்பில் உயிரிழந்த முபீனின் உறவினரான அஃப்சர் கான் என்பரை நேற்று நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்தனர்.
கார் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், என்ஐஏ அதிகாரிகளும் கோவையில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“