கோவையில் என்.ஐ ஏ சோதனை என்ற பெயரில் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகள் போல சித்தரிப்பது கண்டிக்கதக்கது என்று - மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ’கோவையில் கடந்த ஆண்டு நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை காரணமாக வைத்து கொண்டு தொடர்ந்து பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இஸ்லாமிய குடும்பத்தினரை துன்புறுத்தி வருகின்றனர்,
இது உண்மையில் கண்டிக்க தக்கது, கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து தண்டிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்,
ஆனால் அரபு மொழி பயின்ற முன்னாள் மாணவர்கள் குடும்பங்களை குறிவைத்து அதிகாலை நேரத்தில் வீட்டின் கதவை உடைப்பது போல தட்டி விசாரணை என்ற பெயரில் இஸ்லாமியர்களை அழைத்து சென்று மக்கள் மத்தியில் இஸ்லாமிய சகோதரர்களை தீவிரவாதிகள் போல சித்தரிப்பது மிகவும் கண்டிக்க தக்கது
இதனை என்.ஐ.ஏ (இவர்கள்) மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்றார்.
தொடர்ந்து பேசிய ஜவாஹிருல்லா ’அரபு மொழி உலகில் பல்வேறு நாடுகளில் பேசும் மொழியாக உள்ளது, இந்த அரபு மொழி பயின்ற முன்னாள், இன்னாள் மாணவர்களின் குடும்பங்களை சோதனை என்ற பெயரில் என்ஐஏ திடீரென சோதனை நடத்தி இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கி அவர்கள் வைத்து இருந்த லேப்டாப், ரொக்க பணத்தை எடுத்து கொண்டு வருகின்றனர்..
குறிப்பாக அந்த பகுதியில் அவர்களை தீவிரவாதிகள் என கூறி விட்டை காலி செய்ய சொல்லி துன்புறுத்தி வருகின்றனர்,
கோவையை தீவிரவாதிகள் கூடாரம் போல பிம்பத்தை உருவாக்கி வருகிறது என்.ஐ.ஏ
மேலகான் குண்டு வெடிப்பு யார் நடத்தியது, அபினவ் பாரத் இயக்கத்தினர் தான் ரெயிலில் குண்டு வெடிப்பை நடத்தியது என நாங்கள் (இஸ்லாமிய அமைப்புகள்) கண்டுபிடித்து தந்தோம் - சிறு பான்மை மக்களின் உணர்வுகளை துன்புறுத்தும் தண்டிக்கும் விதமாக அவதூறு வழக்கு போட்டு வருகிறது என்ஐஏ என்றார்,
இதற்கு முன்பே அசாருதீன் என்பவர் எற்கனவே குற்றவழக்கில் ஜெயிலில் உள்ளார்.
அவரை கார் குண்டு வெடிப்பு சம்பவத்திலும், அரபு மொழி பயிலும் பயின்ற மாணவர்களுடன் தொடர்பு படுத்தி என்ஐஏ வழக்கு பதிவு செய்து இருப்பது கண்டிக்கதக்கது’, என்றார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“