Advertisment

ஆழியாறு வனத்துறை செக்போஸ்ட் அருகே டூவீலரில் மோதித் தூக்கிய கார்: ஷாக் சி.சி.டிவி காட்சிகள்

Car - two-wheeler accident near Azhiyar forest check post Tamil News: பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி பகுதியில், இரு சக்கர வாகனம் - கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

author-image
WebDesk
New Update
Coimbatore: Car rammed into two-wheeler near Azhiyar forest check post: Shock CCTV footage

Coimbatore - Azhiyar forest check post - accident cctv Tamil News

Coimbatore News in Tamil: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கதிரவன் ஓட்டி வந்த டாடா சஃபாரி வாகனம், பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை நோக்கி சுற்றுலாவிற்குச் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

Advertisment
publive-image

இந்த சம்பவத்தை அறிந்த ஆழியார் காவல் நிலைய போலீசார் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்ட இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சேக் முகமது என்பவரையும், பின்புறம் அமர்ந்து வந்த இதயத்துல்லாவுக்கும் காயம் ஏற்பட்டது. இவரையும் முதலுதவி சிகிச்சைக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டனர் .

publive-image

இதில் ஷேக்முகமது என்ற 40 வயதுடைய நபர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதயத்துல்லா என்ற நபருக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோயமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய கதிரவன் என்பவரை ஆழியார் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Coimbatore Cctv Footage Tamilnadu Road Accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment